தமிழ்நாடு

ரூ.40.80 லட்சம்; பறக்கும் படை சோதனையில் சிக்கியது...மாவட்டம் முழுதும் தொடரும் நடவடிக்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 40.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி நகை, பணம், சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு வரும் 6ம் தேதி முதல் கட்ட தேர்தல்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இதுவரை 40.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி நகை, பணம், சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் திருக்கோவிலுார், திருநாவலுார், உளுந்துார்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு வரும் 6ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.மீதமுள்ள கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை உள்ளிட்ட 5 ஒன்றியங்களில் வரும் 9ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தேர்தல் தேதி அறிவித்த தினத்தில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதனைத் தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள், நகைகள் உள்ளிட்டவற்றை வழங்குவதை தடுக்கும் பொருட்டு, 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டன. இரண்டு ஒன்றியங்களுக்கு, ஒரு பறக்கும் படை குழுவினர் ஷிப்ட் முறையில் சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கிராமங்களில் பொது இடம் மற்றும் தனியார் இடத்தில் சுவர் விளம்பரம் வரைதல், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பிரசாரம் செய்தல், பிரசார வாகனங்களுக்கு அனுமதி பெற்றுள்ளனரா என்பது குறித்தும் கண்காணித்து வருகின்றனர்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை 15 லட்சத்து 91 ஆயிரத்து 270 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், 20 லட்சத்து 81 ஆயிரத்து 620 ரூபாய் மதிப்பிலான 35.89 கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்கள், 19 ஆயிரத்து 500 மதிப்புள்ள 130 வேட்டிகள், 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 டவர் பேன்கள், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 970 மதிப்புள்ள வீட்டு உபயோக சில்வர் பாத்திரங்கள், 20 ஆயிரம் மதிப்பிலான 20 அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தமாக, 40 லட்சத்து 80 ஆயிரத்து 360 ரூபாய் மதிப்புள்ள பணம், நகை, சில்வர் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X