தமிழ்நாடு

ரூ.2.21 லட்சம் மதிப்பில் 'போலாட்' புறவழிச்சாலையில் கலெக்டர் ஆய்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் புறவழிச்சாலையில் விபத்தினைத் தவிர்க்க சாலையின் நடுவே பொருத்தப்பட்டுள்ள 'போலாட்களை' கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.உளுந்துார்பேட்டை - தலைவாசல் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் இரு வழிச்சாலைகள் உள்ளன. நான்கு வழிச்சாலைகள் இரு வழிச்சாலையாக குறுகும் இடங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. இதனால், உயிர்ச்சேதமும்
 ரூ.2.21 லட்சம் மதிப்பில் 'போலாட்' புறவழிச்சாலையில் கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் புறவழிச்சாலையில் விபத்தினைத் தவிர்க்க சாலையின் நடுவே பொருத்தப்பட்டுள்ள 'போலாட்களை' கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.

உளுந்துார்பேட்டை - தலைவாசல் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் 4 இடங்களில் இரு வழிச்சாலைகள் உள்ளன. நான்கு வழிச்சாலைகள் இரு வழிச்சாலையாக குறுகும் இடங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. இதனால், உயிர்ச்சேதமும் அதிகரிக்கிறது. இதையொட்டி கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சாலை பாதுகாப்பு கூட்டத்தில் விபத்தினைத் தடுப்பதற்காக சாலையின் நடுவே 'போலாட்'களை பொருத்துமாறு நகாய் அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார். இதையொட்டி தியாகதுருகம் புறவழிச்சாலையில் 2.21 லட்சம் ரூபாய் மதிப்பில், 18 மீட்டருக்கு ஒரு 'போலாட்' என 3 கி.மீ., துாரத்திற்கு மொத்தம் 170 'போலாட்'கள் பொருத்தப்பட்டுள்ளன.இதனை கலெக்டர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு செய்தார். மேலும், விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் மேற்கொள்ள அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலர் பாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X