அ.தி.மு.க., கிளை ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., கிளை ஆலோசனைக் கூட்டம்

Added : அக் 02, 2021
Share
குறிஞ்சிப்பாடி--வடலுார் அருகே உள்ள கொள்ளக்குடி, கருங்குழி, மருவாய், அரங்கமங்கலம் கிராமங்களில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., கிளை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசகையில், இரண்டு அணிகள் தேர்தலில் போட்டியிடும் போது எது

குறிஞ்சிப்பாடி--வடலுார் அருகே உள்ள கொள்ளக்குடி, கருங்குழி, மருவாய், அரங்கமங்கலம் கிராமங்களில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., கிளை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன் பேசகையில், இரண்டு அணிகள் தேர்தலில் போட்டியிடும் போது எது நல்லது, யார் வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என பார்த்து ஓட்டளிக்க வேண்டும். மிக குறைவான ஓட்டு வித்தியாசத்தில் தான் தி.மு.க.,வினர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினால் எந்த திட்டமும் தர முடியாது. தமிழகத்தின் எதிர்கால திட்டத்தை நிறைவேற்றும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.,தான். கடந்த கால அ.தி.மு.க., ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்களிடம் கூறி, எதிர்காலத்தில் நாம் ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும், என்றார். உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. கட்சி வளர்ச்சி குறித்தும், உள்ளாட்சித் தேர்தல், நெய்வேலியில் முன்னாள் முதல்வர் ஜெ.,சிலை திறப்பு விழா ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் நந்தகுமார், கிளை செயலாளர்கள் தவசிமணி, மணிவண்ணன், முருகன், ராமலிங்கம், மருவாய் தேவநாதன், பேரவை சக்திவேல், பாசறை சந்திரசேகரன், ஊராட்சி செயலாளர் நல்லதம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X