கிரைம் செய்திகள்.....

Added : அக் 02, 2021
Share
Advertisement
எலி மருந்து குடித்தவர் சாவுபுதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த கள்ளுக்கடைமேட்டைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் விஷ்ணுவர்தன் , 21; இவர் கடந்த 29 ம் தேதி வித்தியாசமாக தலைமுடியை வெட்டினார். இது குறித்து தாய் பன்னீர்செல்வம் கேட்டதால், ஆத்திரமடைந்த விஷ்ணுவர்தன் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி நேற்று

எலி மருந்து குடித்தவர் சாவுபுதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த கள்ளுக்கடைமேட்டைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் விஷ்ணுவர்தன் , 21; இவர் கடந்த 29 ம் தேதி வித்தியாசமாக தலைமுடியை வெட்டினார். இது குறித்து தாய் பன்னீர்செல்வம் கேட்டதால், ஆத்திரமடைந்த விஷ்ணுவர்தன் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். டிராக்டர் பறிமுதல்புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். பூச்சிமேடு ரயில்வே ஜங்ஷன் அருகே டிராக்டரில் அனுமதியின்றி சவுடு மணல் ஏற்றி வந்த காயல்பட்டை சேர்ந்தபாஷ்யம், 40; என்பவரை கைது செய்து, டிராக்டர் மற்றும் டிப்பரை பறிமுதல் செய்தனர்.தவறி விழுந்தவர் சாவு புவனகிரி: புவனகிரி கோட்டை மேட்டுத்தெரு முருகன் மகன் வினோத்,36; கடந்த 26 ம் தேதி மதியம் 3.00 மணிக்கு குடிபோதையில் பைக்கில் சென்றார். புவனகிரி பெருமாள் கோவில் தெரு சென்ற போது கீழே விழுந்தார். சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் மாலை இறந்தார். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். மேனேஜரை தாக்கியவர்கள் மீது வழக்கு விருத்தாசலம்: விருத்தாசலம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 23; தனியார் கம்பெனியில் மேனேஜராக பணி புரிகிறார். நேற்று முன்தினம் இவரை அதே பகுதி சங்கீத், 24; பாலாஜி, 22; திட்டி தாக்கினர். புகாரின் பேரில் சங்கீத், பாலாஜி மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மகன் மாயம்: தந்தை புகார் விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 51; கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை நல்லதம்பி கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து ரங்கநாதனை தேடி வருகின்றனர். மாணவி கடத்தல்: வாலிபருக்கு வலைவிருத்தாசலம்: விருத்தாசலம் மணலுாரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 55, இவரது மகள் பவித்ரா, 19, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். கடந்த 28ம் தேதி கல்லுாரி சென்ற பவித்ராவை, புவனகிரி அடுத்த அழிச்சிகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயராஜ் கடத்திச் சென்றுள்ளார். புகாரின் பேரில், ஜெயராஜ் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.குட்கா பதுக்கியவர் கைது கடலுார்: கடலுார், முதுநகர் அடுத்த சான்றோர்பாளையத்தைச் சேர்ந்தவர் அன்பு, 32; இவர் தனது பெட்டிக் கடையில் 'குட்கா' பொருட்கள் பதுக்கி விற்றார். தகவலறிந்த போலீசார் சென்று அன்புவை கைது செய்து, ரூ. 1,700 மதிப்பில் 'குட்கா' பொருட்களை பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்ற இருவர் கைதுகுள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி சப்இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் நேற்று காலை சுப்ரமணியபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதி பஸ் நிறுத்தம் அருகில் லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த நடராஜன், 50; செந்தில்குமார், 42; ஆகியோரை கைது செய்தனர்.மாணவியை தாக்கியவர் கைதுகுள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த அப்பியம்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி கட்டியங்குப்பம் அரசு மேல் நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். இவர் நேற்று பள்ளிக்கு சென்ற போது கட்டியங்குப்பத்தை சேர்ந்த பி.எஸ்.சி., பட்டதாரி ராஜபாண்டி, 21; என்பவர் வழி மறித்து கன்னத்தில் அறைந்தார். மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து ராஜபாண்டியை கைது செய்தனர். இவர் மாணவியை ஒருதலையாக காதலித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X