பொது செய்தி

தமிழ்நாடு

ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசளிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கடலுார்,-புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கம்மாபுரம் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் சார்பில், கம்மாபுரம் அருகே சேப்ளாநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாதம், துாய்மை இந்தியா இயக்கம், இந்திய சுதந்திர தின ஆண்டு விழா மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.விருத்தாசலம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) செல்வபாண்டி தலைமை தாங்கி, ஆரோக்கிய

கடலுார்,-புதுச்சேரி மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கம்மாபுரம் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலகம் சார்பில், கம்மாபுரம் அருகே சேப்ளாநத்தம் அரசு பள்ளியில் ஊட்டச்சத்து மாதம், துாய்மை இந்தியா இயக்கம், இந்திய சுதந்திர தின ஆண்டு விழா மற்றும் கொரோனா தடுப்பூசி குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.விருத்தாசலம் ஆர்.டி.ஓ., (பொறுப்பு) செல்வபாண்டி தலைமை தாங்கி, ஆரோக்கிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் அடங்கிய பெட்டகங்களை வழங்கினார். மக்கள் தொடர்பு கள அலுவலக துணை இயக்குநர் சிவக்குமார் வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் மருதமுத்து, பள்ளி தலைமையாசிரியர் சுந்தரேசன் முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மாவட்ட அலுவலர் பழனி துவக்கவுரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு நடந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். கள விளம்பர உதவியாளர் தியாகராஜன் நன்றி கூறினார். அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் கண்காட்சியையும் அமைத்திருந்தனர். இந்திய அரசு இசை- நாடகப் பிரிவின் அங்காள பரமேஸ்வரி கிரியேஷன்ஸ் குழுவினரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X