கோவில் திருப்பணிக்கு ரூ. 88 லட்சம் ஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் திருப்பணிக்கு ரூ. 88 லட்சம் ஒதுக்கீடு

Added : அக் 02, 2021
Share
நெல்லிக்குப்பம்-திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக அறநிலையத்துறை ரூ. 88 லட்சம் ஒதுக்கியது.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006ம் ஆண்டு நடந்தது. இக்கோவிலுக்கு தேர் செய்ய ரூ. 43 லட்சம் அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்தது. தேருக்கு தேவையான அச்சு செய்ய திருச்சி பெல் நிறுவனத்திடம்

நெல்லிக்குப்பம்-திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவில் திருப்பணிக்காக அறநிலையத்துறை ரூ. 88 லட்சம் ஒதுக்கியது.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்ததாளாம்பிகை உடனுறை நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006ம் ஆண்டு நடந்தது. இக்கோவிலுக்கு தேர் செய்ய ரூ. 43 லட்சம் அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்தது. தேருக்கு தேவையான அச்சு செய்ய திருச்சி பெல் நிறுவனத்திடம் கொடுத்தனர். கொரோனா ஊடரங்கு காரணமாக அச்சு வராமல் தேர் பணி முடியவில்லை.இந்நிலையில் கோவில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய ரூ. 41 லட்சம், குளத்தை சீரமைக்க ரூ. 4 லட்சம் அறநிலையத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. இதை அறிந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விரைவில் திருப்பணி முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டுமென கோரியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X