அந்தரத்தில் தொங்கும் பாலம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம்-ஸ்ரீமுஷ்ணம் அருகே இடிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கும் பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வலசக்காடு கிராமத்தில் பெரிய பாண்டியன் ஏரியின் நடுவில் பாளையங்கோட்டையில் இருந்து வலசக்காடு செல்லும் சாலையில் முக்குட்டி கரை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. வலசக்காடு

ஸ்ரீமுஷ்ணம்-ஸ்ரீமுஷ்ணம் அருகே இடிந்து விழும் நிலையில் அந்தரத்தில் தொங்கும் பாலத்தை இடித்து புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீமுஷ்ணம் அடுத்த வலசக்காடு கிராமத்தில் பெரிய பாண்டியன் ஏரியின் நடுவில் பாளையங்கோட்டையில் இருந்து வலசக்காடு செல்லும் சாலையில் முக்குட்டி கரை அருகே பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது. வலசக்காடு கிராமத்தில் இருந்து பாளையங்கோட்டைக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் அபாயகரமான பாலத்தை தினமும் கடந்து சென்று வருகின்றனர்.பாலத்தின் இருபுறங்களிலும் தண்ணீர் நிற்பதால் பாலத்தின் அஸ்திவாரம் கரைந்து மேல் பகுதி அந்தரத்தில் தொங்குவதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்தால் வலசக்காடு கிராம மக்கள் பாளையங்கோட்டைக்கு 6 கி.மீ., துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த சாலையில் இரவு நேரங்களில் கனரக வாகனம் சென்றால் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. அந்தரத்தில் தொங்கும் பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X