பொது செய்தி

தமிழ்நாடு

வறட்சியை மிரள வைக்கும் இயற்கை விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கரிசல் பூமியில் முட்டைகோஸ், காலிபிளவர் விளைவித்து சாதிப்பு

Added : அக் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளான். வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சி, முன்னேற்றம் வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், தொழில் நுட்பங்களை சார்ந்து மாறுபட்டு இருந்துள்ளது. நிலத்தை பண்படுத்துவதற்கு விலங்குகளையும், தாவரங்களையும் பயன்படுத்தி உள்ளான். வேளாண் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளை 'நிலைகொள் வேளாண் மை' 'உயிரி
 வறட்சியை மிரள வைக்கும் இயற்கை விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்     கரிசல் பூமியில் முட்டைகோஸ், காலிபிளவர் விளைவித்து சாதிப்பு


அருப்புக்கோட்டை : மனிதன் பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளான். வரலாற்றில் வேளாண்மையின் வளர்ச்சி, முன்னேற்றம் வெவ்வேறு தட்பவெப்பநிலைகள், தொழில் நுட்பங்களை சார்ந்து மாறுபட்டு இருந்துள்ளது.

நிலத்தை பண்படுத்துவதற்கு விலங்குகளையும், தாவரங்களையும் பயன்படுத்தி உள்ளான். வேளாண் தொழிலை இயற்கையோடு இசைய நிகழ்த்தும் முறைகளை 'நிலைகொள் வேளாண் மை' 'உயிரி வேளாண்மை' என நடைமுறைக்கு வந்துள்ளன. ஆனால் இன்றைய நவீன உலகில் பரப்பரப்பான வாழ்க்கை சூழலுக்கு மாறி விட்டோம். பலவித நவீன வசதிகளுக்கும் அடிமைப்பட்டு விட்டோம்.

இது கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. விவசாயத்தில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக விளைச்சல், விதை, உரம், பூச்சி மருந்து, விவசாய உபகரணங்களை பயன்படுத்தி அதிக உற்பத்தி செய்தலில், நாம் பாரம்பரிய விவசாயம், கிராமங்களை மறந்து விட்டோம்.பட்ஜெட் விவசாயத்தில் உழாமல் பயிர் செய்ய வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். பலவித துறைகளில் புதுமை, 'அப்டேட்' செய்கின்ற நாம் விவசாயத்தில் மட்டும் 'மாத்தி யோசி' க்க தயங்குகிறோம்.பூந்தோட்டம்இது போன்ற நிலையில் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் 22 ஏக்கர் விவசாய நிலத்தை பண்படுத்தி வறட்சியை கூட விவசாயத்தால் மிரள வைக்கிறார் 'பசுமை வளவன்' அசோக்குமார்.

பயிர் சாகுபடி செய்ய ஆயிரத்து 800 முதல்2 ஆயிரத்து 200 மி.மீ., அளவு நீர் தேவைப்படும் பயிர்களான கரும்பு ,வாழை போன்ற பயிர்களை அடர் நடவு முறையில் பயிரிட்டு அதிக மகசூலை எடுத்து வருகிறார். பூக்கள் சாகுபடியில் ரோஜா, மல்லிகை, மஞ்சள், வெள்ளை செவ்வந்தி, கோழி கொண்டை பூ, மல்லிகை, நந்தியா வட்டை, கேந்தி பூ என பலவித பயிர்களை பயிரிட்டு ஒரு பூந்தோட்டத்தையே உருவாக்கி உள்ளார். மலை, குளிர் பிரதேசங்களில் விளைய கூடிய முட்டைகோஸ், காலிபிளவர் போன்றவற்றை வறண்ட பூமியில் சாகுபடி செய்து சாதனை படைத்திருக்கிறார்

அசோக்குமார். பாரம்பரிய பயிர்களான குதிரைவாலி, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, பாசிப்பயறு, கடலை பயிர்களையும் விளைவிக்கிறார்.இதோடு தன் நிலத்தில் பெரிய அளவில் 'பசுமை குடில்' அமைத்து அதில் பூச்செடிகள், மரக்கன்றுகளை நாற்றுகளாக வளர்த்து வருகிறார். பெங்களூர் சூழ்நிலையில் வளரும் செண்டு பூ (கேந்தி) விதைகளை வாங்கி அவற்றை நாற்றுகளாக வளர்த்து நட்டு ,அதிக மகசூல் பெற்று சாதிக்கிறார். இயற்கை உரம்இவற்றின் விதைகளை பராமரித்து தாய் விதைகளை எடுத்து உள்ளூர் விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறார்.

விவசாய நிலம் முழுவதும் இயற்கை உரங்களையே பயன்படுத்துகிறார். மண் மலடாகாமல் பார்த்து கொண்டால் நல்ல மகசூல் பெறலாம் என்பதற்கேற்ப, இயற்கை உரங்களான மாட்டுசாணம், மக்கி போன குப்பை, ஆட்டு சாணம், மண்புழு உரங்கள், கடலை புண்ணாக்கு, வேப்பம் புண்ணாக்கு, மக்கி போன இலை தழைகள், தேங்காய் நார் கழிவுகள் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரித்து பயன்படுத்துகிறார். தாய் விதைசெடிகளின் வளர்ச்சியை துரிதப்படுத்தி பூக்கொட்டுதலை குறைத்து அதிக மகசூல் பெற உதவும் வளர்ச்சி ஊக்கிகள், இயற்கை பூச்சி கொல்லி மருந்துகளான பஞ்சகவ்யம், கஞ்சம்பட்டி காய் கரைசல், பூண்டு, மிளகாய், கிராம்பு, வேப்பிலை, இஞ்சி கலந்த புழு கொல்லி கரைசல், தெமோர் கரைசல், கோகோ பிட் ஊரவைத்த தண்ணீர் போன்றவற்றை சரியான நேரத்தில் பயன்படுத்தி சாதிக்கிறார்.

விதைகள், நாற்றுகளை வெளி ஊர்களில், பிற பகுதிகளில் விலைக்கு வாங்குவதை விட, அவற்றை ஒருமுறை வாங்கி தன் நிலத்தில் விதைத்து தாய் விதைகளை உருவாக்கி அவற்றை கொண்டு மீண்டும் விதைப்பதே இவரின் நோக்கம். அனைத்து வித பயிர்களுக்கும் தாய் விதைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.இந்த பகுதி வறட்சியான பகுதி, இதில் குறிப்பிட்ட பயிர்கள் தான் விளையும் என்ற நிலையை மாற்றி, நிலத்தை நன்கு உழுது இயற்கை முறைகளை பின்பற்றி அனைத்து பயிர்களையும் விளைவிக்க முடியும் என சாதித்து காட்டியதுடன், தன் நிலம் முழுவதும் குளுகுளுவென மரங்கள், பூஞ்செடிகள், மூலிகை தோட்டம் என பசுமை புரட்சியுடன் பிரமிப்பூட்டுகிறார் இயற்கை விவசாயி அசோக்குமார்.விருதுநகர், அக். 2 -


விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.9.57 லட்சம் மதிப்பில் ராம்கோ குரூப் சேர்மன் வெங்கட்ராம ராஜா நன்கொடையில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம், அதற்கான புதிய கட்டிடத்தை கலெக்டர் மேகநாதரெட்டி திறந்து வைத்தார்.டி.ஆர்.ஓ.,மங்களராமசுப்பிரமணியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் காளிமுத்து, அலுவலக மேலாளர் பரமானந்த ராஜா, ராம்கோ மூத்த பொதுமேலாளர் மணிகண்டன், ராம்கோபொறியியல் துறை பொது மேலாளர் கண்ணன், ராம்கோ துணை பொது மேலாளர் ராமகிருஷ்ணன், ராம்கோ மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
02-அக்-202119:37:19 IST Report Abuse
M  Ramachandran இந்த விவாசியிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
02-அக்-202119:34:22 IST Report Abuse
M  Ramachandran உர வியாபாரம் செழிக்க இயற்கை விவசாயத்தை அழிக்க இந்த அமெரிக்கா மேற்கத்திய நாடுகள் ஆரம்பகால கையேந்தும் நிலையிலிருந்த காங்கிரஸும் ஒரு காரணம். அப்போதைய படித்த விவசாயமந்திரியாக இருந்த சி.சுப்பிரமணியமும் ஒரு காகிறானாம். அவர் அமெரிக்கா சென்று சில ஒப்பானதங்களில் 420 சரத்தின்படி கையெழுத்திட்டு (சரத்துக்களை படித்து வல்லுநர் கொண்டு நன்ஙகு அதன் முழு விவரமும் தெரிந்து கையெழுத்திட்டிருக்க வேண்டும்) அப்படி செய்யாமல் கையெழுத்திட்டு வந்திருக்கதால் நம் இந்தியாவிற்கு பாதகம் விளைந்தது. இது தெரிந்து திரு காமராஜர் மனம் வெதும்பி மனதிற்குள் புழுங்கினார். அப்போனது காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தலைவர். அதற்கு முன்பு தேராபர் என்பவர் காங்கிரஸ் தலைவர். காமராஜர் பதிவை யேற்றபின் இது நடந்தது. சி.சுப்ரமணியன் அவர்கள் தன கையெழுத்திட்டு வந்த ஒப்பந்தத்தந்தை பற்றி விளக்க அப்போது குஜடத்தில் கூட்டப்பட்ட காங்கிரஸ் மாக நாட்டில் வாசிக்க எழுந்தவுடன் காமராஜர் யூதேயனே தமிழில் உட்க்காருடா என்று சத்தம் போட்டார். இது அப்போதைய செய்திதாளைகளில் பிரசுரமாகி இருந்தது. இது முதல் கொஞ்சகொஞ்சம்மாக விவசாயிகளை மனமாற்றி இயற்கை விவாசாயித்திலிருந்து தற்கால விவசாயத்திற்கு அடிபணிய வைத்து விட்டாரகள். இதனால் விவாசாய்க்கால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் மாடு வளர்த்தல் போனற தொழில்கள் நசிந்து விட்டான. நாம் இஙகு பசுக்களை தெய்வமாக வணகுகிறோம். அமெரிக்கா போனற மேலை நாட்டில் அவைகள் என்ன வகையில் சித்ரவதை படுகின்றன என்பது பல பேருக்கு தெரியாது. கிராம வாழ்கையையே தொலைத்து விட்டோம். கிராமங்களில் சிறிய நீரொடைகள் சிறு வாக்கால் கல் குளங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விட்டான. நம் சென்னையில் ஒரு இருபது வருடஙகளுக்கு மும்பு காலை வேளயில் வீட்டின் முன்பு சிறு குருவிகள் கிழிகள் கொடுக்கும் அந்த கீச்சு கீச்சு சத்தம் கேட்கமுடிகிறதா? புறாக்களும் காகங்களும் தான் உள்ளான. நாம் நிறைய தொலைத்து விட்டோம். கிராமங்களில் இருந்த அந்த ஒட்டு வீடுகள் இப்போர் இல்லை. இன்னும் கொஞ்சநாளில் இலவே இல்ல என்றாகும். அந்த ஓடு இபோலாது தாயார் செய்வது மில்லை. அந்த ஓடு மாற்று வேலைய தெரிந்த வெள்ளிய சேய்வோரும் இல்லை. நானும் கிராமத்தில் வீடு வாங்கி அலகு சென்று விடலாம் என்று முயன்ற போனது அலகு உள்ள நிலவரத்தைய அலகு உள்ளவர் தெரிவித்தார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X