பொது செய்தி

தமிழ்நாடு

மண்டல கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-கடலுார் - விருத்தாசலம் - சேலம் சாலையில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை மண்டல கண்காணிப்பு பொறியாளர் ரண ஜெயசிங் ஆய்வு செய்தார்.கடலுார் - விருத்தாசலம் - சேலம் சாலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், நெய்வேலி அடுத்த ஊ.மங்கலம், விருத்தாசலம் அடுத்த பரவளூர், விளாங்காட்டூர் ஆகிய விபத்து பகுதிகளில் ரூ.12 கோடி மதிப்பில், சாலை மேம்பாட்டு

விருத்தாசலம்-கடலுார் - விருத்தாசலம் - சேலம் சாலையில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை மண்டல கண்காணிப்பு பொறியாளர் ரண ஜெயசிங் ஆய்வு செய்தார்.கடலுார் - விருத்தாசலம் - சேலம் சாலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், நெய்வேலி அடுத்த ஊ.மங்கலம், விருத்தாசலம் அடுத்த பரவளூர், விளாங்காட்டூர் ஆகிய விபத்து பகுதிகளில் ரூ.12 கோடி மதிப்பில், சாலை மேம்பாட்டு பணி நடக்கிறது.இந்த சாலையில் உள்ள விருத்தாசலம் - மணவாளநல்லுார் இருவழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலபடுத்தும் பணி, சேலம் புறவழிச்சாலை, விருத்தாம்பிகை ஐ.டி.ஐ., அருகே ரூ. 37 கோடியில், அமைய உள்ள மேம்பாலம் பணிகளை, மண்டல கண்காணிப்பு பொறியாளர் ரண ஜெயசிங், தலைமை பொறியாளர் பாலமுருகன், கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கோட்ட பொறியாளர்கள் ரவி, இளங்கோ, உதவி பொறியாளர்கள் கவிதா, ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். சாலை மேம்படுத்தும் பணி மற்றும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள், மற்றும் உதவி பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X