பொது செய்தி

தமிழ்நாடு

புத்தேரி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெண்ணாடம்-பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபம் நடக்கிறது.இதனை முன்னிட்டு, இன்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை; 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணியளவில் கோவில் பிரகாரம் அருகே உள்ள திறந்தவெளி

பெண்ணாடம்-பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம், மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று திருக்கல்யாண வைபம் நடக்கிறது.இதனை முன்னிட்டு, இன்று காலை 10:00 மணியளவில் உலக மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை; 10:30 மணியளவில் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணியளவில் கோவில் பிரகாரம் அருகே உள்ள திறந்தவெளி மைதானத்தில், உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், இரவு 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சுவாமிகள் பழ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். இரவு 8:00 மணிக்கு உற்சவர் சுவாமிகள் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X