பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் இன்சூரன்ஸ் தொகை வழங்க கோரிக்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கடலுார்,-விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை உடனே வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல்

கடலுார்,-விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் தொகை உடனே வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலுாரில் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், பொருளாளர் தட்சிணாமூர்த்தி, துணைத்தலைவர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான அனைத்து இடங்களிலும் திறந்து விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இடைத் தரகர்கள் தலையீட்டை தடுக்க வேண்டும். 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2020-- 21 பயிர் இன்சூரன்ஸ் தொகை உடனே வழங்க வேண்டும். புயலால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க அரசுக்கு கோரிக்கை வைப்பது எனவும், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 7ம் தேதி கடலுார் நுகர்பொருள் வாணிப கழகம் மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X