பொது செய்தி

தமிழ்நாடு

ரவுடிகளிடம் ஆயுத புழக்கம் அதிகரிப்பு: அலட்சிய போலீசாரிடம் விளக்கம் கேட்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை;ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரிடம், கத்தி, வாள், அரிவாள், துப்பாக்கிகள் என பயங்கர ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அளவுக்கு, அலட்சியமாக இருந்தது ஏன் என்பது குறித்து, போலீசாரிடம் மண்டல ஐ.ஜி.,க்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.தமிழகத்தில் தலைகளை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் கலாசாரம் தலை துாக்கி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள்

சென்னை;ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரிடம், கத்தி, வாள், அரிவாள், துப்பாக்கிகள் என பயங்கர ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருக்கும் அளவுக்கு, அலட்சியமாக இருந்தது ஏன் என்பது குறித்து, போலீசாரிடம் மண்டல ஐ.ஜி.,க்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.தமிழகத்தில் தலைகளை துண்டித்து கொடூரமாக கொலை செய்யும் கலாசாரம் தலை துாக்கி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, கவர்னர் ஆர்.என்.ரவி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரை அழைத்து விளக்கம் கேட்டார்.இந்த சந்திப்புக்கு பின், மாநிலம் முழுதும், கூலிப்படையினர் மற்றும்ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை டி.ஜி.பி., முடுக்கி விட்டார். போலீசார் 52 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தி, கொலை வழக்கில் சிக்கிய 3,325 ரவுடிகளை கைது செய்தனர்.அவர்களிடம், கத்தி, வாள், வீச்சரிவாள் என 1,110 பயங்கர ஆயுதங்கள், ஏழு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். இந்த ஆயுதங்களை பார்த்து போலீஸ் அதிகாரிகளே மிரண்டனர். ரவுடிகளிடம் சர்வ சாதாரணமாக ஆயுத புழக்கம் அதிகரிக்கும் அளவுக்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் போலீசார் என்ன செய்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரிடம், ஆயுத பரவலை கட்டுப்படுத்த, போலீஸ் கமிஷனர்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு, டி.ஜி.பி., அதிரடி உத்தரவுகளைபிறப்பித்துள்ளார்.இந்நிலையில், ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரிடம் சர்வ சாதாரணமாக ஆயுத புழக்கம் அதிகரிக்க காரணம் என்ன; அவர்கள் மீது முன் கூட்டியே நடவடிக்கை எடுத்து, ஆயுதங்களை கைப்பற்றாமல் அலட்சியமாக இருந்தது ஏன்?ரவுடிகளை தப்பிக்க விட்டு மாமூல் வசூலித்தீர்களா என்பது குறித்து, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பகுதிகளில் பணிபுரியும் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., உள்ளிட்டோரிடம், மண்டல ஐ.ஜி.,க்கள் விளக்கம் கேட்டுள்ளனர்.ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை ஒழிப்பது, போலீஸ் அதிகாரிகளின் அன்றாட பணி. நடமாட்டத்தில் உள்ள, ரவுடிகளின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். சிறைகளில் இருந்து வெளியே வந்துள்ள ரவுடிகளின் பட்டியலும் அவர்களிடம் இருக்கும். இந்தரவுடிகளையும் கண்காணிக்க வேண்டும்.வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ரவுடிகள் குறித்து, உளவுத்துறை போலீசார் கண்காணித்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவை அனைத்தும், கடிகார முட்களை போல செயல்பட்டவாறு இருக்க வேண்டும். காலையில், 7:00 மணிக்கு வந்தோம்; மதியம், 2:00 - 5:00 மணி வரை குட்டி துாக்கம்; எப்போதும், 'மீட்டிங்கில்' இருப்பது போன்ற நடிப்பு எல்லாம், ஒருபோதும் குற்றங்களை குறைக்கவோ, ரவுடிகளை ஒழிக்கவோ உதவாது.இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X