பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா 'பாசிடிவ்' பயணி விமானத்தில் ஏற முயற்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா 'பாசிடிவ்' பயணி, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ததாக போலிச் சான்று கொடுத்து விமானத்தில் ஏற முயன்றபோது பிடிபட்டார்.கோவை போத்தனுாரை சேர்ந்தவர், கோவையில் இருந்து தோஹா வழியாக நைஜீரியா செல்ல திட்டமிட்டு இருந்தார். விமானத்தில் செல்ல ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை அவசியம் என்பதால், கடந்த 29ம் தேதி பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என, தெரியவந்தது.அதை

கோவை:கொரோனா 'பாசிடிவ்' பயணி, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்ததாக போலிச் சான்று கொடுத்து விமானத்தில் ஏற முயன்றபோது பிடிபட்டார்.கோவை போத்தனுாரை சேர்ந்தவர், கோவையில் இருந்து தோஹா வழியாக நைஜீரியா செல்ல திட்டமிட்டு இருந்தார். விமானத்தில் செல்ல ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை அவசியம் என்பதால், கடந்த 29ம் தேதி பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு கொரோனா பாசிடிவ் என, தெரியவந்தது.அதை மறைத்து போலியாக ஒரு பரிசோதனை சான்றை 'நெகடிவ்' என, தயார் செய்து நேற்று முன்தினம் நைஜீரியா செல்ல கோவை விமான நிலையம் வந்தார். விமான நிலைய அதிகாரிகள் பரிசோதனை செய்த போது, சான்றிதழின் உண்மை தன்மை குறித்து சந்தேகம் ஏற்பட்டது.உடனே கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் ரவீந்திரனை தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்தனர். அது போலி சான்று என, தெரியவந்தது. அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தபோது, கொரோனா 'பாசிடிவ்' என, தெரியவந்தது. விமான நிலைய அதிகாரிகள் விழிப்புடன் இருந்ததால், 500 பயணிகள் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர். போலிச் சான்று எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X