கழிவு நீரால் சுகாதாரக்கேடு, பயன்பாட்டிற்கு வராத தண்ணீர் தொட்டி தேனி நகராட்சி 22வது வார்டு மக்கள் சிரமம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
தேனி : சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக்கேடு, பயன்பாட்டுக்கு வராத தண்ணீர் தொட்டி; பயத்தை ஏற்படுத்தும் ரயில்வே லைன், எரியாத தெருவிளக்குகளால் இருள் சூழ்ந்த தெருக்கள்'' என, பல்வேறு குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி 22வது வார்டு பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.இந்த வார்டில் பவர் ஹவுஸ் தெரு, காமராஜர் லைன் தெரு, கொண்டு ராஜா பள்ளித் தெரு, சின்னத்தேவர் லைன், எஸ்.ஐ.ஆர். ரோடு,

தேனி : சாக்கடை கழிவுநீரால் சுகாதாரக்கேடு, பயன்பாட்டுக்கு வராத தண்ணீர் தொட்டி; பயத்தை ஏற்படுத்தும் ரயில்வே லைன், எரியாத தெருவிளக்குகளால் இருள் சூழ்ந்த தெருக்கள்'' என, பல்வேறு குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி 22வது வார்டு பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த வார்டில் பவர் ஹவுஸ் தெரு, காமராஜர் லைன் தெரு, கொண்டு ராஜா பள்ளித் தெரு, சின்னத்தேவர் லைன், எஸ்.ஐ.ஆர். ரோடு, வி.வி.ஜி., பேக்டரி தெருக்கள், அதன் குறுக்குத்தெருக்கள் என, 9 தெருக்கள் உள்ளன. தெருக்களில் 20 நாய்கள் ஒன்று சேர்ந்து மக்களை நடமாட விடாமல் அச்சுறுத்தி விரட்டுகிறது. எரியாத தெருவிளக்குகளால் இருள் சூழ்ந்துஉள்ளது. மின் விளக்குகள் மாற்ற வேண்டும். என்.ஆர்.டி., நகரில் இருந்து வரும் கழிவுநீர் குழாய் உடைந்து ரயில்வே லைன் பகுதியில் கழிவுநீருடன் குப்பையும் சேர்வதால், துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மர்மக்காய்ச்சலில் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.

நகராட்சி அதிகாரிகள் இதனை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொது மக்கள் கருத்துதடுப்புச்சுவர் அவசியம்எம்.சண்முகலட்சுமி, குடும்பத் தலைவி, காமராஜர் லைன் தெரு, தேனி: ''எங்கள் வீட்டின் வாசல் முன் மதுரை -- போடி அகல ரயில்பாதை செல்கிறது. வாசலுக்கும் ரயில்வே லைன் உள்ள மண்மேடு மூன்றரை அடி மட்டுமே உள்ளதால், டூவீலர் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. நகராட்சி, ரயில்வேத்துறை ஒப்புதலுடன் தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும். பவர் ஹவுஸ் தெருவில் உள்ள தண்ணீர் தொட்டி சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும்.'' என்றார்.அச்சுறுத்தல்டி.கர்ணன், குடும்பத் தலைவர், பவர் ஹவுஸ் தெரு, தேனி: இங்குள்ள தலைமை தபால் அலுவலகத்தில் ரயில்வே முன்பதிவு நடந்தது. தற்போது இச்சேவையை தபால்துறை நிறுத்தி விட்டது. ஆனால் அலுவலக வேலை நேரம் முடிந்த பின், இரவில் வெளிமாநில இளைஞர்கள் கூட்டம், கூட்டமாக முன்பதிவு செய்ய வருகின்றனர். முன்பதிவு செய்வதற்காக தபால் அலுவலகம் நுழைவாயில் முன் விடிய, விடிய படுத்துக் கொள்கின்றனர். மறுநாள் காலையில் பணியாளர்கள் கூறிய பின் செல்கின்றனர். இது வாடிக்கையாக உள்ளது. இதனால் வீட்டில் உள்ள பெண்கள் அச்சமடைகின்றனர். போலீசார் இரவில் ரோந்து வந்து கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X