பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் - விருதுநகர்

Added : அக் 02, 2021
Share
Advertisement
பட்டாசு கடையில் தீ சிவகாசி: ராமசாமிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் 45, சொந்தமான பட்டாசு கடை சிவகாமிபுரம் காலனியில் உள்ளது. இக் கடையை மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமார் 35, குத்தகைக்கு எடுத்திருந்தார். கடையின் அருகில் தகர செட் அமைத்து நேற்று முன்தினம் இரவு 12:15 மணிக்கு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சீலிங் மெஷினிலிருந்து ஏற்பட்ட தீயில்
 போலீஸ் செய்திகள்  - விருதுநகர்

பட்டாசு கடையில் தீ

சிவகாசி: ராமசாமிபுரத்தை சேர்ந்த சிவக்குமார் 45, சொந்தமான பட்டாசு கடை சிவகாமிபுரம் காலனியில் உள்ளது. இக் கடையை மருதுபாண்டியர் மேட்டு தெருவை சேர்ந்த முத்துக்குமார் 35, குத்தகைக்கு எடுத்திருந்தார்.

கடையின் அருகில் தகர செட் அமைத்து நேற்று முன்தினம் இரவு 12:15 மணிக்கு கிப்ட் பாக்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். சீலிங் மெஷினிலிருந்து ஏற்பட்ட தீயில் பட்டாசு தீப்பிடித்து வெடித்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தகர செட் சேதமடைந்தது. கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

பன்றிகள் திருட்டைதடுத்தவருக்கு வெட்டுசாத்துார்:- சாத்துார் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்பாலமுருகன் 40 .இவரது சகோதரர் சுப்பையா பாண்டியன் 45. இருவரும் சாத்துார் நகராட்சி குப்பை கிடங்கு பகுதியில் பன்றிகள் வளர்த்து வருகின்றனர்.

நேற்று அதிகாலை 2:20 மணிக்கு பன்றிகள் அலறும் சப்தம் கேட்டு இருவரும் அங்கு சென்றனர். தாயில்பட்டி பச்சையாபுரம் பகுதி சண்முககுமார் , கிழதாயில்பட்டி மாரீஸ்வரன், கனகராஜ், சூரியராஜ், ஆகியோர் ஆட்டோ லோடு வாகனத்தில் பன்றிகளை திருடி ஏற்றனர். தடுத்தபோது இவர்களை தாக்கிய கும்பல் ,அவர்களிடம் இருந்த அலைபேசியை திருடி கொண்டு தப்பினர்.

அரிவாளால் தாக்கியதில் சுப்பையா பாண்டியன் காயமடைந்தார் . அம்மாபட்டி போலீசார் பன்றிகள் திருட்டு கும்பலை தேடுகின்றனர்.சாட்சிகளை மிரட்ட சென்றவர் கைதுசிவகாசி: திருத்தங்கல் மருதுபாண்டியன் எஸ்.ஐ., ஆலமரத்துப்பட்டி ரோடு பகுதியில் போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார் .

முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்த பாலு 27, கத்தியுடன் சென்று கொண்டிருந்தார் . அவரை விசாரித்ததில் கிழக்கு போலீசில் கொலை வழக்கு உள்ளதால், சாட்சிகளை மிரட்ட செல்வதாகவும், மறுத்தால் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

போலீசார் அவரை கைது செய்தனர்.தலைமையாசிரியர் பலிசிவகாசி: திருத்தங்கல் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் வடமலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சத்யநாராயணன் 53. டூ வீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) திருத்தங்கல் ரோட்டில் சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதி இறந்தார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X