கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தாய் கொடூர கொலை: மகனுக்கு துாக்கு தண்டனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ், 45; மனைவி திலகராணி, 45. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். 2007ம் ஆண்டு குடும்பத் தகராறில், கணவர் தங்கராஜ் மீது திலகராணி தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்ததாக, கறம்பக்குடி போலீசார் திலகராணியை கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், சில மாதங்களில் திலகராணி விடுதலை
 தாய் கொடூர கொலை: மகனுக்கு துாக்கு தண்டனை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ், 45; மனைவி திலகராணி, 45. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். 2007ம் ஆண்டு குடும்பத் தகராறில், கணவர் தங்கராஜ் மீது திலகராணி தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்ததாக, கறம்பக்குடி போலீசார் திலகராணியை கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், சில மாதங்களில் திலகராணி விடுதலை செய்யப்பட்டார்.திலகராணி, மூத்த மகன் ஆனந்த், 25, இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. அவ்வப்போது தகராறு நடந்துள்ளது. 2018 மார்ச் 18ல் அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில், தாய் திலகராணியை ஆனந்த் அரிவாளால் வெட்டி கொலை செய்து, தலையை துண்டித்து கையில் எடுத்துச் சென்று வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தார்.மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தை கைது செய்தனர். வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து, நேற்று நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஆனந்திற்கு, துாக்கு தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X