பயன்படுத்திய எண்ணையில் உணவுகள் தயார் நடவடிக்கையின்மையால் சிறுகடைகளில் ஜோர்| Dinamalar

தமிழ்நாடு

பயன்படுத்திய எண்ணையில் உணவுகள் தயார் நடவடிக்கையின்மையால் சிறுகடைகளில் ஜோர்

Added : அக் 02, 2021
Share
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் உணவு பண்டங்கள் தயாரிப்பு பெரிய நிறுவனங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை சிறு கடைகளில் பயன்படுத்தும் நிலையில், அதிகாரிகளும் கண்டுக்காமல் விடுவதால் அப்பாவி மக்கள்தான் பாதிப்பை சந்திக்கின்றனர்.ஒருமுறை உபயோகப்படுத்த வேண்டிய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி செய்யப்படும் உணவு பண்டங்களால் , புற்றுநோய் உள்ளிட்ட


ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் உணவு பண்டங்கள் தயாரிப்பு பெரிய நிறுவனங்களில் பயன்படுத்திய சமையல் எண்ணெயை சிறு கடைகளில் பயன்படுத்தும் நிலையில், அதிகாரிகளும் கண்டுக்காமல் விடுவதால் அப்பாவி மக்கள்தான் பாதிப்பை சந்திக்கின்றனர்.

ஒருமுறை உபயோகப்படுத்த வேண்டிய சமையல் எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி செய்யப்படும் உணவு பண்டங்களால் , புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவத்துறை எச்சரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு சமையல் எண்ணையை வெளிமார்க்கெட்டில் மறு விற்பனை செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், முதல்நிலை உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெயை விலைக்கு வாங்கி, சாலையோர கடைகள், தள்ளு வண்டிகள், கையேந்தி பவன்கள் , சில உணவகங்களில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வினியோகிக்க படுகிறது.இதுபோன்ற செயல்களால் பொது மக்களின் உடல்நிலை பாதிக்கப் படுவதை தடுக்க மாற்று ஏற்பாடாக, இவற்றை தனியார் நிறுவனங்கள் மூலம் பெற்று உயிரி எரிபொருள் ஆக மாற்ற உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்து ஒவ்வொரு உணவு உற்பத்தி நிறுவனத்திலும் பயன்படுத்திய எண்ணெயை சேகரிக்க தனி கேன்கள் வழங்கப்பட்டது. அதிகாரிகளின் கண்காணிப்பு குறைவால் பயன்படுத்திய சமையல் எண்ணெயை திருப்பி ஒப்படைக்கும் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் விலை கிடைப்பதால் பயன்படுத்திய எண்ணெய் மறைமுகமாக சிறு கடைகளுக்கு விற்கபட்டு வருகிறது. இதை சிறு உணவு நிறுவனங்கள் பயன்படுத்துவது ஜோராக நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தி துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்

வேண்டும் நடவடிக்கை:

பெரிய உணவு நிறுவனங்களின் பேராசையால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே .இந் நிலையை உணர்ந்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க பெரிய நிறுவனங்கள் முன் வர வேண்டும். ஓட்டல்கள், பேக்கரிகள் மட்டுமின்றி கல்லுாரிகளில் செயல்படும் விடுதிகள், கேண்டீன்கள், அன்னதான கூடங்கள் சிறு உணவகங்கள் ,டீக்கடைகளில் இதன் கண்காணிப்பை உறுதி செய்ய வேண்டும். இது சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகமும் உறுதி படுத்த வேண்டும்.குமார், தொழில் முனைவோர், ராஜபாளையம்................

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X