பொது செய்தி

தமிழ்நாடு

மாரடைப்பால் 35 சதவீதம் பேர் உயிரிழக்கும் அபாயம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி யின் செஞ்சுருள் சங்கம் சார்பில் நலமான இதயமே மகிழ்ச்சியின் திறவுகோல்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடந்தது. சங்க உறுப்பினர் சிவலட்சுமி வரவேற்றார்.கல்லுாரிச் செயலாளர் காளிராஜ், இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், சுப்புராஜ், முதல்வர் சித்ரா பேசினர். தேனி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரூபாபிரியதர்ஷினி, உலகில்

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி யின் செஞ்சுருள் சங்கம் சார்பில் நலமான இதயமே மகிழ்ச்சியின் திறவுகோல்' என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு நடந்தது.

சங்க உறுப்பினர் சிவலட்சுமி வரவேற்றார்.கல்லுாரிச் செயலாளர் காளிராஜ், இணைச் செயலாளர்கள் வன்னியராஜன், சுப்புராஜ், முதல்வர் சித்ரா பேசினர். தேனி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ரூபாபிரியதர்ஷினி, உலகில் மாரடைப்பால் 17.3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். உலகளவில் இறப்புக்கள் 29 சதவீதம் மாரடைப்பால் ஏற்படுகிறது. அதிலும் 82 சதவீதம் வறுமை கோட்டீற்கு கீழே உள்ள நாடுகளிலும், வளரும் நாடுகளில் ஏற்படுகின்றன. இருபதாம் நுாற்றாண்டில் 10 சதவீதம், 21ல் 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. 30 வயதிற்கு மேல் உள்ளோர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது இருதய பரிசோதனைகளை செய்வது அவசியம்.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X