சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு: ஒருவர் உட்பட இதுவரை 4 பேர் பலி

Added : அக் 02, 2021
Share
Advertisement
கூடலுார்;கூடலுார் அருகே மீண்டும் ஒருவரை புலி தாக்கி கொன்றதால், சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி புலி தாக்கி கொன்றது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.அப்பகுதியில் ஏழு நாட்கள் தேடி வந்த நிலையில், புலி முதுமலை வழியாக, 30 கி.மீ.,
 ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு:  ஒருவர் உட்பட இதுவரை 4 பேர் பலி

கூடலுார்;கூடலுார் அருகே மீண்டும் ஒருவரை புலி தாக்கி கொன்றதால், சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன், 51, என்பவரை, 24ம் தேதி புலி தாக்கி கொன்றது. புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.அப்பகுதியில் ஏழு நாட்கள் தேடி வந்த நிலையில், புலி முதுமலை வழியாக, 30 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடிக்கு நேற்று காலை வந்துள்ளது. இதை அறிந்த வனத்துறையினர், மசினகுடி வனப்பகுதியில் புலியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், பகல் 1:00 மணிக்கு, மசினகுடி கல்குவாரி அருகே, மாடு மேய்த்து கொண்டிருந்த குரும்பர் பாடியை சேர்ந்த மங்களபசுவன்,85, என்பரை புலி தாக்கி இழுத்து சென்றது. சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர்.தொடர்ந்து, அப்பகுதி மக்கள் முதியவர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு கையை இழந்தநிலையில் முட்புதரில் கிடந்த உடலை கண்டுபிடித்தனர். போலீசார், வனத்துறையினர் உடலை எடுக்க சென்றபோது பொதுமக்கள் தடுத்தனர்.'இதுவரை நான்கு பேரை கொன்ற புலியை சுட்டுக்கொல்லும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்' என, தெரிவித்தனர். தொடர்ந்து, மசினகுடி பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இறந்தவர் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடுத்து வந்தனர். அப்போது பொதுமக்கள் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின் உடலை எடுத்து சென்றனர்.அவசர உத்தரவுஇந்நிலையில், தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டார். 'மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மிகவும் அபாயகரமான புலியை வேட்டையாட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என, அவர் உத்தரவிட்டுள்ளார்.இந்த தகவலை வனத்துறை அதிகாரிகள் மக்களிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஐந்து மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.அதிரடிப்படை தேடுதல்வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில்,''தமிழக, கேரளா, கர்நாடகா வனத்துறை மற்றும் அதிரடிப்படை போலீசார் 80 பேர் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X