பொது செய்தி

தமிழ்நாடு

மூணாறில் திறந்த வெளியில் செயல்படும் பஸ் ஸ்டாண்ட்

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மூணாறு : மூணாறில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் அடிப்படை வசதிகள் இன்றி திறந்த வெளியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகின்றது.சுற்றுலா நகரான மூணாறில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் ஆட்டோ ஸ்டாண்ட்டில் திறந்த வெளியில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பழைய மூணாறில் ஊராட்சிக்குச் சொந்தமான தனியார்
 மூணாறில் திறந்த வெளியில்  செயல்படும் பஸ் ஸ்டாண்ட்

மூணாறு : மூணாறில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் அடிப்படை வசதிகள் இன்றி திறந்த வெளியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகின்றது.

சுற்றுலா நகரான மூணாறில் தபால் அலுவலகம் ஜங்ஷனில் ஆட்டோ ஸ்டாண்ட்டில் திறந்த வெளியில் பஸ் ஸ்டாண்ட் செயல்படுகிறது. அங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லை.போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பழைய மூணாறில் ஊராட்சிக்குச் சொந்தமான தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்பஸ் ஸ்டாண்ட்டை மாற்ற கடந்தமார்ச்சில் நடந்த போக்குவரத்து ஒழுங்குமுறை ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்தும் நடைமுறை படுத்தவில்லை.

ஆனால் பழைய மூணாறு பஸ் ஸ்டாண்ட்டை மாற்றுவதற்கு தனியார் பஸ் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மூணாறு ஊராட்சி செயலர் அஜித்குமார் கூறுகையில், ''தேவிகுளம் சப் -கலெக்டர் ராகுல்கிருஷ்ணாசர்மா தலைமையில் அக்.8 ல்நடக்கும் போக்குவரத்து ஒழுங்கு முறை ஆலோசனை கூட்டத்தில் பஸ் ஸ்டாண்ட் மாற்றுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202111:45:50 IST Report Abuse
அப்புசாமி பிரதமருக்கு சொல்லுங்க. மங்க்கீ பாத்துல பேசி, கழிப்பறை கட்டச் சொல்லுவாரு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X