பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோரை கடவுளாக போற்ற வேண்டும்

Added : அக் 02, 2021
Share
Advertisement
போடி : பெற்றோர்கள் கடவுளாக போற்ற வேண்டியவர்கள் அவர்களை பராமரிக்காதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என போடி தர்மத்துப்பட்டியில் நடந்த சர்வதேச முதியோர் தினவிழாவில் மாவட்ட சார்பு நீதிபதி ராஜ்மோகன் பேசினார்.நீதிபதி ராஜ்மோகன் பேசுகையில்:''பெற்ற பிள்ளைகளுக்கு எந்த பெற்றோரும் கெடுதல் நினைப்பதில்லை. பெற்றோர்கள் நமக்கு முன்னோடி. அவர்கள் பெற்ற அனுபவங்களை நமக்கு
 பெற்றோரை கடவுளாக போற்ற வேண்டும்

போடி : பெற்றோர்கள் கடவுளாக போற்ற வேண்டியவர்கள் அவர்களை பராமரிக்காதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என போடி தர்மத்துப்பட்டியில் நடந்த சர்வதேச முதியோர் தினவிழாவில் மாவட்ட சார்பு நீதிபதி ராஜ்மோகன் பேசினார்.

நீதிபதி ராஜ்மோகன் பேசுகையில்:''பெற்ற பிள்ளைகளுக்கு எந்த பெற்றோரும் கெடுதல் நினைப்பதில்லை. பெற்றோர்கள் நமக்கு முன்னோடி. அவர்கள் பெற்ற அனுபவங்களை நமக்கு கற்றுத்தருகின்றனர். பெற்றோர்கள் கடவுளாக போற்றப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்களை இந்த தினத்தில் மட்டும் கொண்டாடாமல் தினம், தினம் கொண்டாட வேண்டும். வயதான பெற்றோர்களை புறக்கணிக்க கூடாது.

பெற்றோர்களை பராமரிக்காதவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.விழாவில் ஏ.எச்.எம். டிரஸ்ட் இயக்குனர் முகமது சேக் இப்ராகிம், டாக்டர் புருஷ் டி ஜாங், போடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், லயன்ஸ் சங்க தலைவர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். பெண்கள் கூட்டமைப்பு செயலாளர் மீனா வரவேற்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X