பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் - மதுரை

Added : அக் 02, 2021
Share
Advertisement
31 பவுன் நகைகள் மீட்பு 12 திருடர்கள் கைதுமதுரை: மதுரை நகரில் 15 நகைபறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள 31 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.கரிமேடு, சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட நாகேந்திரன், சதீஷ், திருநகர் பகுதியில் ரமேஷ் என்ற சிங்கத்தேவன் கைது செய்யப்பட்டனர். அண்ணாநகர் பகுதியில் ஆகாஷ், அபினேஷ்,

31 பவுன் நகைகள் மீட்பு 12 திருடர்கள் கைது

மதுரை: மதுரை நகரில் 15 நகைபறிப்பு வழக்குகளில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள 31 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர்.கரிமேடு, சுப்பிரமணியபுரம் போலீஸ் ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்ட நாகேந்திரன், சதீஷ், திருநகர் பகுதியில் ரமேஷ் என்ற சிங்கத்தேவன் கைது செய்யப்பட்டனர்.

அண்ணாநகர் பகுதியில் ஆகாஷ், அபினேஷ், ராஜசேகரன், ஆனந்தகுமார், வீரபாண்டி, அவனியாபுரம் பகுதியில் ஹரிஹரன், சபரி, மதிச்சியம் பகுதியில் ேஷர் ஆட்டோவில் நகை திருடிய பூங்கொடி, நந்தினி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்த போலீசாரை கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்ஹா, துணைகமிஷனர் ராஜசேகரன் பாராட்டினர். அவர்கள் கூறுகையில், ''குற்றவாளிகளை அடையாளம் காண தங்கள் பகுதியில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமரா பொருத்த முன்வரவேண்டும்'' என்றனர்.

வேன் மோதி பலி

ருமங்கலம்: குமாரசாமி தெரு மனோகரன் 65. கப்பலுார் சிட்கோவில் வேலை பார்த்தார். 3 நாட்களுக்கு முன்பு கப்பலுார் காலனி அருகே ரோட்டை கடக்க முயன்ற போது வேன் மோதி காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். கார் மோதி முதியவர் பலிகள்ளிக்குடி: பேரையூர் சின்னரெட்டியபட்டி முத்துராமலிங்கம் 84. பத்து நாட்களுக்கு முன்பு கள்ளிக்குடி

4 வழிச்சாலையை கடக்க முயன்ற போது திருமங்கலம் - விருதுநகர் கார் மோதி காயமடைந்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார்.வாகனங்கள் பறிமுதல்மேலுார்: கொட்டகுடி பெரிகுளத்து கண்மாய் பகுதியில் மேலுார் போலீசார் ரோந்து சென்ற போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளியவர்கள் தப்பினர். மண் அள்ளும் இயந்திரம், லாரியை பறிமுதல் செய்து வாகன உரிமையாளர் கல்லம்பட்டி சதாம் உசேனை தேடி வருகின்றனர்.

கத்தியுடன் கைது

சோழவந்தான்: எஸ்.ஐ., ராஜேந்திரன் மற்றும் போலீசார் சித்தாலங்குடி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கத்தியுடன் ரகளை செய்து பொதுமக்களை மிரட்டிய அதேபகுதி மருதுபாண்டியை 35, கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர்.சகோதரர்களுக்கு வெட்டுவாடிப்பட்டி: சிறுமலை மீனாட்சிபுரம் ஸ்ரீரங்கன் மகன்கள் பெருமாள் 40, கணேசன் 33. இவர்களுக்கும், விராலிப்பட்டி முனியாண்டி மகன்கள் கண்ணன்,

செல்வத்திற்கும் இடத்தகராறு உள்ளது. கண்ணன், செல்வம் ஆகியோர் நிலத்தில் வேலை பார்த்த கணேசன், பெருமாளை அரிவாள், கத்தியால் தாக்கிவிட்டு தப்பினர்.அரிவாள் வெட்டுமேலுார்: வெள்ளரிப்பட்டி கோடீஸ்வரனுக்கும்24, உறவினர் முத்துக்குமரனை கொலை செய்தது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த விஸ்வா, பிரவீன்,லோகுவிற்கும் முன்விரோதம் இருந்தது. நேற்று காலை வெள்ளரிப்பட்டி பெரியாற்று கால்வாயில் கோடீஸ்வரன் குளித்த போதுமூவரும் தகராறு செய்து அரிவாளால் வெட்டினர். போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்தில் 10 பேர் காயம்

மேலுார்: திருச்சி -- சிவகங்கைக்கு நிலக்கரி கொண்டு சென்ற லாரி நேற்று அதிகாலை 4:00 மணியளவில் மேலுார், மலம்பட்டி நான்கு வழிச்சாலையில் திடீரென திரும்பிபோது சென்னை - சிவகாசி ஆம்னி பஸ் மீது மோதியது. இதில் சிவகாசி மகேந்திரன் 35, நாகராஜ் 18, மதுரை செல்லுார் வசந்தா 51 உட்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டது.மது விற்றவர்கள் கைதுபேரையூர்: டி.கல்லுபட்டியில் மது விற்ற எம்.சுப்புலாபுரம் செல்வதிருமாலை 35, கைது செய்து 45 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போல் சாப்டூரில் மது விற்ற செல்லாயிபுரம் மகாலிங்கம் 50, பெரியவண்டாரியில் மது விற்ற மகாலிங்கத்தை 30, கைது செய்து 35 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலுார்: மாவட்ட எஸ்.பி., பாஸ்கரனின் தனிப்படை போலீசார் ரோந்து சென்ற போது திருவாதவூர் பாக்யராஜ் 36, பதினெட்டாங்குடி தர்மராஜ் 52, ஆகியோரை கைது செய்து 450 மதுபாட்டில்கள் மற்றும் 2 டூவீலர்களைபறிமுதல் செய்தனர்.* அட்டப்பட்டி - கீழையூர் ரோட்டில் கீழவளவு எஸ்.ஐ., பாலமுருகன் ரோந்து சென்ற போது பெட்டிக்கடை அருகே மதுவிற்ற கீழவளவு பாண்டியை38, கைது செய்து 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X