பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: காவல்துறையை தடுப்பது ஆளுங்கட்சியினரா, அதிகாரிகளா, செல்வாக்கா? 'மில்லியன் டாலர்' கேள்வி!

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:அ.முத்துராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 929 கத்திகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை
Police, Tamil Nadu Police, TN police


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


அ.முத்துராமன், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் அதிரடி நடவடிக்கை வாயிலாக 36 மணி நேரத்தில் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 929 கத்திகள் மற்றும் ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இந்த அதிரடி நடவடிக்கையை காவல்துறை எடுத்திருக்காவிட்டால், அந்த 2,512 ரவுடிகளும் அன்றாடம் நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் குற்றச்செயல்களை அரங்கேற்றி இருப்பர். அதில் எத்தனை கொலை சம்பவங்களோ...

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ரவுடிகள் அட்டகாசம் அதிகரிக்கும் என்ற பொதுவானதொரு எண்ணம் அனைவருக்கும் உண்டு. அந்த 2,512 ரவுடிகளும் கைது செய்யப்பட்ட நாள் வரை, குற்றச்செயல்களில் ஈடுபட்டனர் தானே... அவர்களை இது நாள் வரை, ஏன் போலீசார் கைது செய்யவில்லை? சுதந்திரமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளை 36 மணி அவகாசத்தில் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அப்படி என்றால், போலீசாருக்கு இந்த கட்டளையை பிறப்பித்தது யார்?


latest tamil news


இத்தனை நாட்களாக ரவுடிகளை கைது செய்ய கூடாது என்று, காவல் துறையின் கைகளுக்கு விலங்கு மாட்டி வைத்திருந்தது யார்? நாய் பிடிக்கும் மாநகராட்சி வண்டியை கண்டதும், தெருவில் செல்வோரை எல்லாம் துரத்தியும், மிரட்டியும் வந்த நாய்கள் எல்லாம், வாலை சுருட்டியபடி பதுங்கி தப்பிக்க முயற்சிக்கும். மாநகராட்சி ஊழியர்கள், அந்த நாய்கள் மீது சுருக்குக் கயிறை வீசி பிடித்து, வண்டியில் துாக்கி போடுவர். அது போல, தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்த காலத்தில், காக்கி அரை கால் சட்டை அணிந்து, சைக்கிளில் ரோந்து வரும் போலீஸ்காரர்களை கண்டவுடன், ரவுடிகள் எல்லாம் பதுங்கி விடுவர்.

ஆனால் தற்போதைய ரவுடிகள், போலீசார் சிலருடன் சேர்ந்து, 'டாஸ்மாக் பார்'களில் சரிசமமாக அமர்ந்து மது அருந்தி, நட்பு பாராட்டுகின்றனரே... அப்புறம் எப்படி குற்றங்கள் குறையும்? ஆக 36 மணி நேரத்தில், 2,512 ரவுடிகளை கைது செய்திருக்கும் சம்பவத்தில் இருந்து ஒரு விஷயம் புலனாகிறது...

முன்னொரு காலத்தில், 'ஸ்காட்லாந்து யார்ட்' போலீசுக்கு இணையாக பெயர் பெற்றிருந்த தமிழக காவல் துறை, முயன்றால் மாநிலத்தில் குற்றங்களே நிகழாதவாறு தடுக்க முடியும். ஆனால் போலீசார் அப்படி செய்வதில்லையே ஏன்? அவர்களை தடுப்பது ஆளுங்கட்சியினரா, அதிகாரிகளா, செல்வாக்கா என்பது தான், 'மில்லியன் டாலர்' கேள்வி!

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
02-அக்-202123:45:26 IST Report Abuse
PKN பத்திரிகையாளர்கள் தான் காரணம்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
02-அக்-202122:17:47 IST Report Abuse
S. Narayanan பொலிசாருக்கு ரவுடிகள் எங்கே பதுங்கி இருக்கிறார்கள் என்பது நன்கு தெரியும். அவர்களை கைது செய்ய வேண்டுமா வேண்டாமா என்ற முடிவை எடுப்பது ஆளுங்கட்சி.பொலிஸார் கைகள் கட்டப்பட்டு இருப்பதால் அவர்களால் தன்னிச்சையாக வேலை செய்ய முடியாது. தமிழ் நாட்டில் இப்போது எங்கும் பிரச்சினை. அதை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் திமுக அரசு தடுமாறுகிறது. இதை மைக்கத்தான் ஸ்டாலின் எஸ். ஐ. சீட்டில் அமர்ந்து போஸ் கொடுப்பது 750 உறுப்பினர்களை ஒரு இடத்தில் குழும செய்து கிராம மீட்டிங் பொலிஸாரை கொண்டு ரவுடிகளை அடக்கி விட்டோம் என்று முன்னுக்கு பின் முரணாக அறிக்கை விடுகிறார் ஸ்டாலின். இதெல்லாம் தேவையா. அரசின் வருவாய் அதிகரிக்க எந்த வழியும் இல்லை. வாக்குறுதிகளை நிறைவேற்ற வழி இல்லை. அதன் விளைவு தான் இந்த நாடகம். ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
02-அக்-202121:41:06 IST Report Abuse
BASKAR TETCHANA அவர்களை தடுப்பது சில அதிகாரிகள் காசுக்கு விலை போகும் போலீசார் தான். தற்போது தமிழகத்தில் 35 சதவிகித போலீசார் நேர்மையாக உள்ளனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X