பொது செய்தி

தமிழ்நாடு

நாளை 4வது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்; 1.50 கோடி பேருக்கு இலக்கு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''தமிழகத்தில் நான்காவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், நாளை நடைபெற உள்ளது. இம்மாதத்தில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால், நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சி
Vaccine, Corona Vaccine, Covid Vaccine

சென்னை : ''தமிழகத்தில் நான்காவது கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம், நாளை நடைபெற உள்ளது. இம்மாதத்தில், 1.50 கோடி பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் பணிகள் நடைபெறுவதால், நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உள்ளாட்சி அமைப்புகளும், சுகாதார பணியாளர்களும் தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்த உதவுவதாக கூறியதால், நாளை நான்காவது தடுப்பூசி முகாமை நடத்த தயாராகி வருகிறோம்.


latest tamil news



20 ஆயிரம் இடங்களில் நடக்கும் முகாம்களில், காலை 7:00 முதல் மாலை 7:00 மணி வரை தடுப்பூசி போடப்படும்.செப்., மாதத்தில், மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, 1.43 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அக்டோபரில் 1.23 கோடி தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கூடுதலாக தடுப்பூசி பெற்று, 1.50 கோடி பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போராடும் செவிலியர்களிடம் பேச்சு நடத்தியுள்ளோம். அனைவரையும், இரண்டு மாதத்தில் பணி நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது என, தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
02-அக்-202110:34:53 IST Report Abuse
R. Vidya Sagar கோவின் இணையத்தளத்தை பயன் படுத்தினால் இன்னும் எண்ணிக்கை கூடும். அதில் தமிழ் மொழி இல்லை என்று சத்தம் போட்டதோடு சரி, அதை சரியாக பயன்படுத்த தெரிய வில்லை.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202108:40:25 IST Report Abuse
duruvasar ஊசி போட்டுக்கிட்டவங்க கிட்ட போனில் பேசி மன உளைச்சல் புள்ளி விவரங்களை ஏதாவது வைத்திருக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். நீட் தேர்வு எழுதியவர்களுக்கு போனை போட்டு மன உளைச்சல் புள்ளி விவரம் எடுத்திருக்கிறார். அதுபோல 1000 ரூபாய் உரிமை தொகை விஷயத்தில் மன உளைச்சல் அளவையும் அறிய ஆவலாய் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X