தமிழ்நாடு

வாசல் வரை பார்க்கிங்... நடு ரோடு வரை கடைகள்... கடைசி வரை ஆக்கிரமிப்பு..

Added : அக் 02, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மதுரை : 'வீட்டு வாசல் வரை பார்க்கிங்... நடு ரோடு வரை கடைகள்... கடைசி வரை ஆக்கிரமிப்பு'... எங்கேனு தானே கேட்குறீங்க. நம்ம பைபாஸ் ரோடு தான்ங்க. 'என்னய்யா இது ரோட்டுல பஸ், கார், டூவீலர் போகும். ஆனால், பைபாஸ் ரோட்டுல மட்டும் தான் குறிப்பா நடு ரோட்டுல சும்மா வரிசைகட்டி கடைகளை வைச்சிருப்பாங்க. போதா குறைக்கு வெள்ளிக்கிழமை சந்தை வேறு. 'ஒருநாள் என்றால் பரவாயில்லை. வாரவாரம்னா...
 வாசல் வரை பார்க்கிங்...  நடு ரோடு வரை கடைகள்...  கடைசி வரை ஆக்கிரமிப்பு..


மதுரை : 'வீட்டு வாசல் வரை பார்க்கிங்... நடு ரோடு வரை கடைகள்... கடைசி வரை ஆக்கிரமிப்பு'... எங்கேனு தானே கேட்குறீங்க. நம்ம பைபாஸ் ரோடு தான்ங்க. 'என்னய்யா இது ரோட்டுல பஸ், கார், டூவீலர் போகும். ஆனால், பைபாஸ் ரோட்டுல மட்டும் தான் குறிப்பா நடு ரோட்டுல சும்மா வரிசைகட்டி கடைகளை வைச்சிருப்பாங்க.

போதா குறைக்கு வெள்ளிக்கிழமை சந்தை வேறு. 'ஒருநாள் என்றால் பரவாயில்லை. வாரவாரம்னா... என்னங்க சார் உங்க அ(நியாயம்)' அப்படினு கேட்டா மாநகராட்சி அதிகாரிகள் முகத்தை திருப்பிட்டு போறாங்க... நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எவன் எப்படி போனால் என்னனு ஓடுறாங்க... இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்கும். கடவுளுக்கே வெளிச்சம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார், ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டபோது அங்கிருந்த கடைகள் தற்காலிகமாக பைபாஸ் ரோடு, எல்லீஸ்நகர் ரோட்டிற்கு இடமாற்றப்பட்டன.

பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என அதிகாரிகள் ஒவ்வொருமுறையும் 'விசிட்' செய்து 'வாய்தா' வாங்கிக்கொண்டே இருக்கிறார்களே தவிர பயன்பாட்டிற்கு வந்தபாடில்லை. அதேசமயம் தற்காலிக கடை உரிமையாளர்களில் சிலர் தங்கள் 'செல்வாக்கை' பயன்படுத்தி பெரியார் பஸ் ஸ்டாண்டில் கடை பெற முயற்சிப்பதோடு, பைபாஸ் ரோட்டில் நிரந்தரமாக கடை 'விரிக்க' திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் கணக்கு போட்டு பைபாஸ் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதால் ரோட்டின் அகலம் சுருங்கி 'சர்வீஸ்' ரோட்டைவிட மோசமாக மாறிவிட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளோ 'நமக்கென்ன' என, வேண்டிய 'பொருட்களை' வாங்கிக்கொண்டு நகர்ந்து விடுகிறார்கள்.
பைபாஸ் ரோடு வந்து பாருங்கப்பூ...சில மாதங்கள் முன் நடந்த மாநகராட்சி ஏலத்தில் புது ஜெயில் ரோடு, சம்மட்டிபுரம், தேனி ரோடு கட்டண கழிவறைகள் போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக இருப்பதாலும், அப்பகுதி ரோடு அகலமாக்கியதாலும் அகற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல், ஆக்கிரமிப்பு கடைகள், மார்க்கெட் செயல்படும் பைபாஸ் ரோட்டை மட்டும் அதிகாரிகள் தொட்டு கூட பார்க்கவில்லை. ஒரு நாள் பைபாஸ் ரோட்டுக்கு வந்து பார்த்தால் தெரியும். அல்லது அதிகாரிகள் வீட்டு வாசலில் கடை விரித்தால் அந்த கஷ்டம் தெரியும். அதிகாரிகள் 'சுகவாசியாக' இருக்காமல் மற்றவர்களின் கஷ்டத்தையும் உணர வேண்டும்.

போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் கட்டண கழிவறைகளை மட்டும் கண்டுபிடிச்சு அகற்றிய மாநகராட்சி, பைபாஸ் ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக பல ஆண்டுகளாக செயல்படும் மார்க்கெட்டுக்கு மீண்டும் ஏலம் எடுத்துள்ளது. இடையூறான மார்கெட்டுக்கு வேறு இடம் மாற்றி ஏலம் எடுக்க அதிகாரிகள் ஏன் சிந்திக்கவில்லை. ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் நெளிந்து செல்லும் நிலையில் மார்க்கெட்டிற்காக போக்குவரத்துள்ள இடத்தை ஆக்கிரமித்து வாரந்தோறும் தொல்லை தருகிறது.செவிடன் காதில் ஊதிய சங்குபைபாஸ் ரோடு எங்கே இருக்கிறது என கேட்டால் இனி யாருக்கும் தெரியாது. 'மார்க்கெட் ரோடு' என கேட்டால் தான் தெரியும். அந்த அளவிற்கு அந்த ரோட்டை ஆக்கிரமிப்பு கடைகள் சீரழித்து விட்டன.சொக்கலிங்க நகர் சந்திப்பு சர்வீஸ் ரோடுகளில் வலது, இடதுபுறம் வெள்ளி கிழமைகளில் மார்க்கெட் கடைகள் நீண்ட வரிசையில் ஆக்கிரமிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் குறைக்க தான் சர்வீஸ் ரோடு தவிர மார்க்கெட் வைக்க அல்ல என அதிகாரிகளுக்கு என்று தான் புரியுமோ. வெள்ளி காலை முதலே சர்வீஸ் ரோடுகளில் கடைகள் விரித்து விடுவர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாது.

இது குறித்து பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் அளித்தும் 'செவிடன் காதில் ஊதிய சங்கு' போல் அலட்சியமாக உள்ளனர்.இடையூறுகளுக்கு இது தான் தீர்வுமதுரையில் போக்குவரத்து அதிகமுள்ள மெயின் மற்றும் சர்வீஸ் ரோடுகள், தெருக்களில் செயல்படும் மார்க்கெட்டுகளை இடம் மாற்ற வேண்டும். பெரும்பாலும் ரோட்டோர மார்க்கெட்டுகள் மாலை நேரம் மட்டும் செயல்படுவதால் அந்தந்த பகுதி உழவர் சந்தைகளில் மாலை முதல் இரவு வரை இடம் ஒதுக்கலாம். அல்லது போக்குவரத்து இல்லாத பகுதிகளில் உள்ள காலி மைதானத்தை ஒதுக்கி கொடுக்கலாம். யாருக்கும் எந்த இடையூறும் இருக்காது. மழை போன்ற சமயங்களில் விற்பனையும் பாதிக்காது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202112:14:33 IST Report Abuse
அப்புசாமி அந்தக் கடைகளில் பொருள் வாங்குறவங்க தான் அறிவிலிகள். தட்டு வண்டில என்னத்த வித்தாலும் வாங்கித் திங்குற கும்பல். இவிங்களை நம்பித்தான் கடையே போடறாங்க.
Rate this:
Cancel
02-அக்-202111:17:59 IST Report Abuse
Gopal Chinnachamy என்னதான் நீதீமன்றங்கள் உத்தரவுகள் வழங்கி ஆக்கிரமிப்பகள் அகற்றப்படவேண்டும் என்றாலும் அடுத்தடுத்து ஆக்கிரமிப்புகள் அங்கிங் எனாமல் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு தான் உள்ளன என்பது கண்கூடு அகற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய திகாரிகள் கைநீட்டி வசூலித்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர் ,தேர்தல்கள் வருகின்றன ஆட்சிமாற்றம் கூட நடந்துவிடுகிறது ஆனால் காட்சி மட்டும் மாறுவதில்லை பதிலாக புதிய ஆளும்கட்சி ஆதரவுடன் புது மற்றும் பழைய நபர்களால் தொடரவதென்னவோ ஆக்கிரமிப்புக்கள் தான், இடையூறு என்னவோ பொதுமக்களுக்குத்தான், வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கறோம் முடிவின்றி.
Rate this:
Cancel
Sathiya Moorthy - Salem,இந்தியா
02-அக்-202108:02:07 IST Report Abuse
Sathiya Moorthy முழுவதும் உண்மை. பல லச்சங்கள் செலவழித்து ஷோரூம். போட்டிருக்கும் கடை உரிமையாளர்கள் குமுறுகின்றனர். முதலில் சிறிய மேஜை போல போட்டு படி படியாக முழு கடையாக மாற்றி மின்சாரமும் வாங்கி விடுகிறார்கள். இதனால் உள்புறம் உள்ள ஷோவ்ரூம்களின் வெளி பார்வை வெகுவாக மறைக்கப்படுகிறது. முன்பெல்லாம் வாகனங்களை ரோட்டோரமாக நிறுத்தி விட்டு மக்கள் ஷாப்பிங் செய்தார்கள். இப்பொழுது அந்த ரோட்டோர சிறிய கடைகள் வாகனங்களை ஓரமாக நிறுத்த ஆட்ஷேபனை தெரிவிக்கிறார்கள். முதல்வரின் செல்லுக்கே புகார் அளித்தாகி விட்டது. போக்குவரத்து காவல் துறை ஒரு வாகனம் நின்றாலே அதை எடுக்குமாறு அறிவிப்பு செய்கிறார்கள். அனால் இந்த கடைகளை ஒன்றும் சொல்வதில்லை. செய்தியாக வெளியிட்ட தினமலருக்கு நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X