பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் ரயிலை முன்கூட்டியே இயக்க வலியுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை -- ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்., 5 முதல் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரம், திருச்சி - திண்டுக்கல், செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பயணிகள் ரயில் இயங்கவில்லை. ஊரடங்கு தளர்வில் ஒவ்வொன்றாக இயக்கப்படுகின்றன. மதுரை - ராமேஸ்வரம், திருச்சி - திண்டுக்கல் முன்பதிவில்லாத சிறப்பு

மதுரை : மதுரை -- ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலை மகாளய அமாவாசையை முன்னிட்டு அக்., 5 முதல் இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் ராமேஸ்வரம், திருச்சி - திண்டுக்கல், செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பயணிகள் ரயில் இயங்கவில்லை. ஊரடங்கு தளர்வில் ஒவ்வொன்றாக இயக்கப்படுகின்றன. மதுரை - ராமேஸ்வரம், திருச்சி - திண்டுக்கல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் அக்., 7 முதல் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மகாளய அமாவாசை அக்., 6 கடைபிடிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் கடலில் நீராட தடையிருந்தாலும் ஏராளமானோர் அங்கு மூதாதையர்களுக்கு திதி கொடுப்பர்.

பெரும்பாலானவர்கள் ரயிலில் பயணிப்பர். எனவே அக்., 5 மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவில்லா ரயிலை இயக்க என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.தட்சிண ரயில்வே எம்பளாயீஸ் யூனியன் செயலாளர் சங்கரநாராயணன் கூறுகையில், ''இரு நாட்களுக்கு முன்னதாக ரயிலை இயக்குவதில் சிரமம் இருக்காது. தற்போது அறிவிக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஒரே முறை காலையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வந்து மாலையில் திரும்பி செல்வதாக உள்ளது. ஊரடங்கு முன் இருந்தபடி காலை, மதியம், மாலையில் இரு மார்க்கங்களிலும் ரயில் இயக்கினால் மட்டுமே பயணிகளுக்கு முழுபயன் சேரும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X