சீனாவின் அத்துமீறல் குறித்து 'குவாட்' தலைவர்கள் பேச்சு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
வாஷிங்டன்: “இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து, 'குவாட்' அமைப்பு தலைவர்கள் அடிக்கடி விவாதித்து வருகின்றனர்,” என, அமெரிக்க ராணுவ தலைமையான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா
Quad Leaders, China, Quad Summit 2021, Quad

வாஷிங்டன்: “இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து, 'குவாட்' அமைப்பு தலைவர்கள் அடிக்கடி விவாதித்து வருகின்றனர்,” என, அமெரிக்க ராணுவ தலைமையான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற இந்த அமைப்பின் மாநாடு சமீபத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது.

இந்நிலையில் அந்த குவாட் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது குறித்து அமெரிக்கா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க ராணுவ அமைச்சகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:


latest tamil news


இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முரட்டுத்தனமாக இருப்பது உண்மை தான். அதுகுறித்தும், சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் தான், குவாட் அமைப்பு தலைவர்கள் அடிக்கடி கலந்துரையாடி வருகின்றனர்.

குவாட் மாநாட்டில் கூட்டணி நாடுகளுடனும் இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. சுதந்திரமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம். அதற்கு தேவையான பணிகளை மேற்கொள்ள இந்த குவாட் அமைப்பு, உறுப்பு நாடுகளுக்கு மிகச் சிறந்த வாய்ப்பை வழங்கி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202121:44:11 IST Report Abuse
அப்புசாமி இந்த நாலு பேராலும்சீன இறக்குமதி இல்லாம ஜீவிக்க முடியாது. அங்கே குவாட் ல உதார் உட்டுட்டு இங்கே சைலண்ட்டாக சீன இறக்குமதியை ஆதரிப்பார்கள்.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-அக்-202113:07:14 IST Report Abuse
தமிழவேல் குவாட்ஸ் மூச்சு விடாமல் கூட்டம் போடுவது சந்தோஷம்தான்.. ஆனால், அதில் உள்ள அமேரிக்கா, ஆஸ்திரேலியா இரண்டும் பிரிட்டனையும் சேர்த்துக்கொண்டு ஆகஸ்ட் ன்னு ஒன்னை இப்போ ஆரம்பிச்சி, இவங்க முதுவுல குத்துனாப்போல தோணல ? அல்லது மத்தவங்களை எல்லாம் கழட்டி விட்டுட்டானுவோலா ?
Rate this:
Cancel
guru - thiruvallore,ஆஸ்திரேலியா
02-அக்-202109:24:07 IST Report Abuse
guru மக்களோட வரி பணத்துல, இவங்க ரொம்பநல பேசுறத சொல்லகிட்டு அரட்டை அடிச்சிக்கிட்டு இருகாங்க ..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
02-அக்-202109:57:53 IST Report Abuse
 Muruga Velரொம்பநல பேசுறத சொல்லகிட்டு ..வரிப்பணத்தில் கல்வி கற்றுக்கொண்டு இப்படி சொதப்பறீங்களே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X