சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளை கொலை செய்த தந்தை போலீசில் சரண்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மகள் அழகேஸ்வரியை 30, வெட்டி கொலை செய்த தந்தை ஆதி 60, போலீசில் சரணடைந்தார்.தோப்படைப்பட்டியை சேர்ந்த அழகேஸ்வரி கணவர் குருசாமியை பிரிந்து 10 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்தார். 2 மகள்கள் உள்ளனர். அழகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தை ஆதி கண்டித்தார். இப்பிரச்னையில் பேரையூர் குண்டாறு அருகே தோட்டத்தில்

கமுதி : ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மகள் அழகேஸ்வரியை 30, வெட்டி கொலை செய்த தந்தை ஆதி 60, போலீசில் சரணடைந்தார்.

தோப்படைப்பட்டியை சேர்ந்த அழகேஸ்வரி கணவர் குருசாமியை பிரிந்து 10 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்தார். 2 மகள்கள் உள்ளனர். அழகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு தந்தை ஆதி கண்டித்தார். இப்பிரச்னையில் பேரையூர் குண்டாறு அருகே தோட்டத்தில் வேலை செய்த அழகேஸ்வரியை, நேற்று மதியம் ஆதி அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார். பின்னர் கோவிலாங்குளம் போலீசில் சரணடைந்தார். பேரையூர் இன்ஸ்பெக்டர் மோகன் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X