பொது செய்தி

தமிழ்நாடு

பட்டாசு வெடிக்க தடை; தொழிலதிபர்கள் கவலை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சிவகாசி : டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலை அதிபர்கள் கவலையில் உள்ளனர்.சிவகாசி பகுதியில் 1070 க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொரேனா தொற்றினால் 2020 ல் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டில்லி உட்பட 7 மாநிலங்களில்

சிவகாசி : டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலை அதிபர்கள் கவலையில் உள்ளனர்.

சிவகாசி பகுதியில் 1070 க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொரேனா தொற்றினால் 2020 ல் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டில்லி உட்பட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசுகள் தேக்கமடைந்த நிலையில் 2021 ல் பட்டாசு உற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை. அதிகபட்சமாக 60 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்தது. இதுபோல் தற்போது ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான் பாமா)தலைவர் கணேசன்: 2020 ல் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்ட 7 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டாசுகளே விற்பனை ஆகாததால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். பட்டாசுகள் இருப்பு அப்படியே உள்ளதால் எந்த ஆர்டரும் வரவில்லை. அதிக மாசு எங்கு உள்ளதோ அப்பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் சில மாநிலங்களில் ஒட்டு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பட்டாசு தொழில் அழிந்து விடும் அபாயம் உள்ளது,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X