சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி கொடுமையால் துப்புரவு பணியாளர் சாவு ஒருவர் கைது; மற்றொருவர் ஓட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்த வழக்கு கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு துாண்டிய வழக்காக மாற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவர் தலைமறைவானார்.மண்டபம் பேரூராட்சி துப்புரவு பணியாளராக மண்டபம் டி.நகர் முனியசாமி 51, பணியாற்றி வந்தார். இவர் செப்.7 ல் பணி செய்த இடம் அருகில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்த வழக்கு கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு துாண்டிய வழக்காக மாற்றப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மற்றொருவர் தலைமறைவானார்.மண்டபம் பேரூராட்சி துப்புரவு பணியாளராக மண்டபம் டி.நகர் முனியசாமி 51, பணியாற்றி வந்தார். இவர் செப்.7 ல் பணி செய்த இடம் அருகில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். கந்து வட்டி கொடுமையால் தற்கொலைக்கு துாண்டப்பட்டது தெரிய வந்தது.இதையடுத்து ஆதிதமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் இரணியன் தலைமையில் அவரது மனைவி செல்வி , குடும்பத்தினர் செப்.20ல் கலெக்டர் , எஸ்.பி.,யிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

விசாரணை நடத்திய மண்டபம் போலீசார் முனியசாமி கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு துாண்டப்பட்டதை உறுதி செய்தனர்.இதனால் தற்கொலை வழக்கை, கந்துவட்டி கொடுமையால் தற்கொலைக்கு துாண்டியதாக மாற்றி மண்டபம் மறவர் தெரு செல்வம், மண்டபம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் வசிக்கும் ரமேஷ்பாபு மீது வழக்கு பதிவு செய்தனர். செல்வம் கைது செய்யப்பட்டார். ரமேஷ்பாபுவை தேடி வருகின்றனர். மேல்விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X