மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்பு; ஜார்க்கண்ட் நிர்வாகத்தை விளாசும் மம்தா

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா தற்போது மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஜார்கண்டில் மழை பெய்து நதிகளில் வெள்ளம் ஏற்படும்போது அவற்றை அணையை மூடி சரியாக தடுக்காத காரணத்தால் மேற்கு வங்கத்தில் வெள்ளம் புகுந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட்-மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள தாமோதர்

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா தற்போது மேற்கு வங்கத்தின் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.



latest tamil news




ஜார்கண்டில் மழை பெய்து நதிகளில் வெள்ளம் ஏற்படும்போது அவற்றை அணையை மூடி சரியாக தடுக்காத காரணத்தால் மேற்கு வங்கத்தில் வெள்ளம் புகுந்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட்-மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள தாமோதர் அணை மூலமாக வெள்ளப்பெருக்கு கட்டுப்படுத்தப்படுகிறது.

தாமோதர் வேலி கார்ப்பரேஷன் (டிவிசி) நிர்வாகம் தாமோதர் அணையை கட்டுப்படுத்தி வருகிறது. மழைக்காலங்களில் ஜார்கண்ட் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் டிவிசி அணையை திறந்துவிடும். இதனால் சில சமயங்களில் மேற்குவங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநில ஆறுகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும்.


latest tamil news




இதன்காரணமாக நதியின் கரையோரம் வாழும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். இதுகுறித்து பேசிய மம்தா, டிவிசி மழைக்காலங்களில் மட்டுமல்லாமல் கோடை காலங்களிலும் மேற்கு வங்கத்தின் கருத்தை தெரிந்துகொள்ளாமல் அணையை திறந்துவிடுகிறது, இதனால் பல மேற்கு வங்க மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

கடந்த 50 ஆண்டுகளாக ஜார்கண்ட் பகுதியில் உள்ள அணைகளில் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் அணைகளை அதிக நீரை தேக்க முடியவில்லை. இதற்கு மத்திய மோடி அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மேலும் பிரதமர் பேரிடர் நிதியிலிருந்து இதற்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை.

மேற்கு வங்க மாநில நிதியிலிருந்து தான் நிவாரண பணிகளுக்கு தங்களது அரசு செலவு செய்வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளார். அணை திறந்து விடப்பட்டதால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை தான் நேரில் சந்திக்கப் போவதாகவும் மாநில நிதியிலிருந்து அவர்களுக்கு உதவித்தொகை அளிக்கப்போவதாகவும் மம்தா உறுதி அளித்துள்ளார்.

மேலும் மேற்குவங்க மாவட்டங்கள் குறித்து அக்கறை கொள்ளாமல் டிவிசி நிர்வாகம் மற்றும் மத்திய மோடி அரசு ஆகியோர் நடந்து கொள்வதாக மம்தா குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
02-அக்-202117:05:04 IST Report Abuse
Lion Drsekar இவரிடம் திட்டு வாங்காத ஒரே மனிதர் இவர் மட்டுமே, வாழ்க இவரது செயல்பாடுகள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
02-அக்-202116:33:37 IST Report Abuse
DVRR நீ தப்பு நீ தப்பு நீ தப்பு இது தான் நான் வாழ்நாள் முழுவதும் ஒரே வார்த்தை எப்போதும் வால் வால் வால் என்று தான் குறைக்கும் என்பது போல இருக்கின்றது. ஏழை மக்களை ஏழையாகவே ஏன் வைத்திருக்கிறாய் மம்தா அப்போ தானே உனக்கு ஒட்டு போடுவார்கள் என்று தானே???
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
02-அக்-202114:06:03 IST Report Abuse
Anand எப்பப்பாத்தாலும் குழாயடி சண்டை போட்டு கொண்டேயிருக்கிறாள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X