பொது செய்தி

தமிழ்நாடு

அக்.,02: மீண்டும் ரூ.100ஐ நெருங்கும் பெட்ரோல்; இன்றும் விலை உயர்வு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,02), பெட்ரோல் லிட்டருக்கு 99.80 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.02 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,02), பெட்ரோல் லிட்டருக்கு 99.80 ரூபாய், டீசல் லிட்டருக்கு 95.02 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news



அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.58 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 94.74 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ 99.80 ஆகவும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ 95.02 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
02-அக்-202114:38:13 IST Report Abuse
A.Gomathinayagam சென்னையில் முக்கிய சாலைகளில் சங்கிலி தொடர் போல் செல்லும் வகை வகையான வாகனங்களை பார்க்கும் பொழுது லிட்டர் பெட்ரோல் இரு நூறுக்கு சென்றாலும் மக்கள் கவலை படுவதாக தெரிய வில்லை
Rate this:
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
02-அக்-202114:37:02 IST Report Abuse
ராம.ராசு ஏதோ தமிழக அரசு தனது பங்கிற்கு ரூபாய் 3 ஜக் குறைத்ததால் இவ்வளவு நாட்கள் நூறு ரூபையைத் தொடாமல் இருந்தது. இதோ இப்போது கூடிய விரைவில் 100 தொட்டுவிடும். தமிழ் நாடு அரசின் அந்த விலைக்கு குறைப்பு வெறும் விழலுக்கு இறைத்த நீரைப் போல ஆகிவிட்டது.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
02-அக்-202113:27:49 IST Report Abuse
Dhurvesh வரலாறு படைத்தது விட்டார் மோடி :: PETROL DESEL GAS வரலாறு காணாத விலையில் , இது தான் மோடியின் உயரிய செயல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X