பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சிறப்பு கண்காட்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை : மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று துவங்கியதுதமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம், 5.5 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு தொழில் பயிற்சி, கடன் வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கி வருகிறது.அந்த வகையில், 3.75 லட்சம் பேர்

சென்னை : மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி, நுங்கம்பாக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று துவங்கியது

தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனம், 5.5 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு தொழில் பயிற்சி, கடன் வழங்கி, தொழில் முனைவோராக உருவாக்கி வருகிறது.அந்த வகையில், 3.75 லட்சம் பேர் உற்பத்தி, வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்த, கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக. நவராத்திரி விழா, தீபாவளியை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் விற்பனை கண்காட்சியை நேற்று துவங்கியது.ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், கண்காட்சியை துவக்கி வைத்தார்.கண்காட்சியில் 55 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 122 மகளிர் சுய உதவி குழுவினர், தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்தி உள்ளனர்.

களிமண், காகிதக்கூழ், பளிங்குத்துாள், மரம், கோல்கட்டா களிமண், சுடு களிமண் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், பல்வேறு வகையான கைவினை பொருட்கள் இடம் பெற்றுள்ளன.பார்வையாளர்கள் வசதிக்காக, ஆறு பாரம்பரிய உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்., 31ம் தேதி வரை நடத்தப்படும் இந்த கண்காட்சிக்கு, தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X