பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தினால் குடை இலவசம்; சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
வில்லிவாக்கம் : வில்லிவாக்கத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு, இலவசமாக குடை வழங்கி, சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கொரோனா பரவலை கட்டுபடுத்த, தடுப்பூசி செலுத்துவதில், அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, பல்வேறு இடங்களில், சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதேபோல், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில்,
 தடுப்பூசி செலுத்தினால் குடை இலவசம்; சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு

வில்லிவாக்கம் : வில்லிவாக்கத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு, இலவசமாக குடை வழங்கி, சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா பரவலை கட்டுபடுத்த, தடுப்பூசி செலுத்துவதில், அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, பல்வேறு இடங்களில், சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதேபோல், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாநகராட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு சலுகைகள் மற்றும் இலவச பொருட்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில், அண்ணா நகர் மண்டலம், 94 வார்டுக்குட்பட்ட, வில்லிவாக்கம் ரயில்வே சாலையில், நடிகர் சிவாஜி பிறந்தநாளை முன்னிட்டு, சிவாஜி சமூக நல பேரவை சார்பில், நேற்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட, 122 பேருக்கு, அமைப்பினர் இலவசமாக குடை வழங்கினர். காவல் துறை மற்றும் மாநகராட்சி இணைந்து அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு, டெங்கு மற்றும் போதை தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்வில், வில்லிவாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X