ஆகாயத்தாமரை அகற்றப்படாததால் அவலம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
நன்மங்கலம் : விவசாயிகளால் காப்பாற்றப்பட்ட நன்மங்கலம் ஏரியில், கழிவு நீர் கலந்து வருவதோடு, ஏரி இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது. சென்னை, நன்மங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது, நன்மங்கலம் ஏரி. 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை நம்பி, சுற்று வட்டார பகுதியில், 250 ஏக்கர் அளவில் விவசாயம் நடந்தது.முகவரிசைநிலங்கள், வீட்டு மனைகளாக மாறியதால் விவசாயம்

நன்மங்கலம் : விவசாயிகளால் காப்பாற்றப்பட்ட நன்மங்கலம் ஏரியில், கழிவு நீர் கலந்து வருவதோடு, ஏரி இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது.

சென்னை, நன்மங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ளது, நன்மங்கலம் ஏரி. 130 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை நம்பி, சுற்று வட்டார பகுதியில், 250 ஏக்கர் அளவில் விவசாயம் நடந்தது.முகவரிசைநிலங்கள், வீட்டு மனைகளாக மாறியதால் விவசாயம் குறைந்தது. சில ஆண்டுகளுக்கு முன் கூட, 100 ஏக்கரில் விவசாயம் நடந்தது. அதில், 70 விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். தற்போது, விவசாயம் பெருமளவு குறைந்து போனது.தொடர் விவசாயத்தின் காரணமாகவும், விவசாயிகள் கண்காணிப்பாலும், இந்த ஏரியில் ஆக்கிரமிப்பாளர்கள், உள்ளூர் கட்சியினர் தங்களின் கைவரிசையை முழுமையாக காட்ட முடியவில்லை. இருப்பினும், ஏரிக்கரையைச் சுற்றி, பல ஏக்கர் நிலப்பகுதி, ஆக்கிரமிப்பாளர் கையில் சிக்கியுள்ளது.

இரண்டு ஆண்டிற்கு முன் ஏற்பட்ட கடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக, நம் நாளிதழ் 'நமக்கு நாமே' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, தன்னார்வலர்கள், சமூக நல விரும்பிகள், பொதுமக்களை ஊக்கப்படுத்தியது.அதன் பலனாக நன்மங்கலம் ஏரியிலும் தன்னார்வலர்கள் மூலம் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டன. பொதுப் பணித் துறை சார்பில் நன்மங்கலம் ஏரியின் கரைகளை, 60 லட்சம் ரூபாய் மதிப்பில் பலப்படுத்தியது.அபாயம்அதன் விளைவாக கடந்த ஆண்டு பெய்த தொடர் மழைக்கு நன்மங்கலம் ஏரி நிரம்பியது. ஆனாலும், பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியை பராமரிக்க தவறியதால், ஏரியின் மேற்கு பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நேரடியாக ஏரியில் விடப்பட்டு வருகிறது.

மேலும், ஏரியின் பெரும் பகுதி ஆகாயத் தாமரை படர்ந்துள்ளது. இதனால், ஏரி இருக்கும் இடமே தெரியாத நிலையில் உள்ளது.அடுத்த தொடர் மழை பெய்யும் பட்சத்தில், ஏரி நீர் நன்மங்கலம் குடியிருப்பு பகுதியில் புகுந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.எனவே, இந்த ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். அதில், வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி, கழிவு நீர் விடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X