பொது செய்தி

தமிழ்நாடு

போதை தடுப்பு விழிப்புணர்வு; மாணவர்கள் மனித சங்கிலி

Added : அக் 02, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம் : சென்னை மாநகராட்சி, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, டெங்கு மற்றும் போதை தடுப்பு குறித்து மனித சங்கிலி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியது.சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், டெங்கு மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தியது.அண்ணா நகர்

கீழ்ப்பாக்கம் : சென்னை மாநகராட்சி, கல்லுாரி மாணவர்களுடன் இணைந்து, டெங்கு மற்றும் போதை தடுப்பு குறித்து மனித சங்கிலி வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறை சார்பில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள டான் பாஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், டெங்கு மற்றும் போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தியது.அண்ணா நகர் மண்டலம், 103வது வார்டு சுகாதார ஆய்வாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் பங்கேற்று, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் கட்டுப்படுத்தும் விதம் குறித்து மாணவர்களிடம் விளக்கினர்.டெங்கு பரப்பும் கொசுக்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை விளக்கும் வகையில், கண்காட்சி நடத்தப்பட்டது.

கண்காட்சியில், கொசுப்புழு உருவாகும் காரணிகளை மாணவர்கள் பார்வையிட்டு, சந்தேகங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.பின், போதை தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது. முடிவில், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், டெய்லர் சாலையில், பொதுமக்களுக்கு டெங்கு மற்றும் போதை தடுப்பு குறித்து, கல்லுாரி மாணவர்கள் மனித சங்கிலி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாணவர்கள், கொரோனா வைரஸ் உட்பட வேடம் அணிந்து, பொதுமக்களுக்கு, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X