பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை கலர் பவுடரால் ஆபத்து; உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை, : ''செயற்கை கலர் பவுடர் கலந்த உணவை உட்கொள்வதால் புற்று நோய் வரும்,'' என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.தமிழ்நாடு வணகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை இணைந்து, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தினர்.கூட்டத்தில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
 செயற்கை கலர் பவுடரால் ஆபத்து; உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை

சென்னை, : ''செயற்கை கலர் பவுடர் கலந்த உணவை உட்கொள்வதால் புற்று நோய் வரும்,'' என சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு வணகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை இணைந்து, உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தினர்.கூட்டத்தில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் பேசியதாவது:உணவு பொருட்களில், செயற்கை கலர் பவுடர் சேர்க்க கூடாது. பழைய அசைவ உணவுகளை பயன்படுத்த கூடாது என, வணிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சிலர் அவற்றை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

சாலையோர உணவகங்களில் தொங்கவிட்டிருக்கும் கோழி இறைச்சியில், செயற்கை கலர் கலந்துஉள்ளது என்பதை மக்கள் அறிய வேண்டும்.அவற்றை உட்கொள்வதால் புற்றுநோய் வரும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில், குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலரிடம் நடத்திய ஆய்வில், கலர் பவுடர் கலந்த வெளி உணவு சாப்பிட்டவர்கள் அதிகமாக உள்ளனர். குளிர்பானங்கள் வெயிலில் வைக்கும் போது, அவை விஷமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X