பொது செய்தி

இந்தியா

மாநில பேரிடர் மீட்பு நிதி; ரூ.7,274 கோடி ஒதுக்கீடு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : பேரிடர் மீட்பு நிதியாக 7,274 கோடி ரூபாயை 23 மாநிலங்களுக்கு முன்கூட்டியே அளிக்க, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் மற்றும் அவசர காலங்களை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையாக 1,599.20 கோடி

புதுடில்லி : பேரிடர் மீட்பு நிதியாக 7,274 கோடி ரூபாயை 23 மாநிலங்களுக்கு முன்கூட்டியே அளிக்க, மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.



latest tamil news



மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலங்களில் ஏற்படும் பேரிடர் மற்றும் அவசர காலங்களை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தில் இருந்து மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையாக 1,599.20 கோடி ரூபாய் ஏற்கனவே ஐந்து மாநிலங்களுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலும் 23 மாநிலங்களுக்கு இரண்டாவது தவணைத் தொகை 7,274 கோடி ரூபாயை முன்கூட்டியே வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த நிதியின் வாயிலாக கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு மாநில அரசுகள் உதவி செய்யவும் இந்த நிதி பயன்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
02-அக்-202107:18:06 IST Report Abuse
duruvasar உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் நிலங்களை மீட்பதற்கே ஆக்ஷன் கிங் அர்ஜுனனாக நடிக்கும் செயல் பாபு தான் காரணம் என ஸ்டிக்கர் ஒட்டி விழா காணும் ஆளும் கட்சிக்கு இந்த பணம் கொண்டு இடர்கால பணிகளை செய்யும் போது இன்னுமொரு வாக்குறுதி நிறைவேற்றிய திட்டமாக அறிவித்து எண் 205 என கொண்டாடப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X