பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கஞ்சா கடத்திய மூவர் சிக்கினர்மாங்காடு: வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், மலையம்பாக்கம் அருகே நேற்று முன்தினம் இரவு, மாங்காடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த மூன்று பேரை மடக்கி விசாரித்தனர். ஆட்டோவை சோதனையிட்டதில், 1.2 கிலோ கஞ்சா இருந்தது. இது தொடர்பாக, மாமண்டூரைச் சேர்ந்த நவீன்குமார், 21, உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.

கஞ்சா கடத்திய மூவர் சிக்கினர்

மாங்காடு: வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், மலையம்பாக்கம் அருகே நேற்று முன்தினம் இரவு, மாங்காடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த மூன்று பேரை மடக்கி விசாரித்தனர். ஆட்டோவை சோதனையிட்டதில், 1.2 கிலோ கஞ்சா இருந்தது. இது தொடர்பாக, மாமண்டூரைச் சேர்ந்த நவீன்குமார், 21, உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். ஆட்டோ, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்

கார் தீப்பிடித்து எரிந்தது

மதுரவாயல்: கே.கே. நகரைச் சேர்ந்தவர் ரவிகண்ணா, 34; தனியார் நிறுவன ஓட்டுனர். நேற்று காலை, நிறுவனத்தில் இருந்து கொளப்பாக்கத்திற்கு காரில் சென்ற போது, மதுரவாயல் காவல் நிலையம் அருகே, காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. காரை ஓரமாக நிறுத்தி கீழே இறங்கிய சற்று நேரத்தில், கார் தீப்பிடித்து எரிந்தது. மதுரவாயல் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பேட்டரி மின் கசிவு காரணமாக கார் தீப்பிடித்திருக்கலாம் என, கூறப்படுகிறது. மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

'பிளம்பர்' தற்கொலை

அயனாவரம்: அயனாவரம், பங்காரு தெருவைச் சேர்ந்தவர் சங்கர், 49; பிளம்பர். இவரது மனைவி பெரிய நாயகி, 45. இவர்களுக்கு திருமணமாகி, 12 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. கடந்த, 28ம் தேதி, பெரிய நாயகி, காஞ்சிபுரத்தில் உள்ள தன் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான சங்கர், குழந்தை இல்லா விரக்தியில், நேற்று நள்ளிரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அயனாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஈரோடு பெண் சென்னையில் மீட்பு

அண்ணாசாலை: அண்ணா சாலையில் நேற்று முன்தினம் இரவு, 11:30 மணியளவில், பெண் ஒருவர், கையில் மூன்று பைகளுடன் சுற்றி திரிந்தார். அந்த பெண்ணை, அண்ணாசாலை போலீசார் விசாரித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்து, போலீசார் சகஜமாக பேச்சு கொடுத்து, அவரது தாயின் மொபைல் போன் எண்ணை வாங்கினர். விசாரணையில், அவர் ஈரோடைச் சேர்ந்தவர் என, தெரியவந்தது. தாயை நேற்று வரவழைத்து, மகள் செல்வலட்சுமியை, 35,போலீசார் ஒப்படைத்தனர்.

மின்சாரம் தாக்கி ஊழியர் படுகாயம்

சிந்தாதிரிப்பேட்டை: திருவொற்றியூர், ஈசான மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு, 30. சிந்தாதிரிப்பேட்டை மின் வாரிய அலுவலக, பகுதி நேர ஊழியர். நேற்று முன்தினம் நள்ளிரவு, சிங்கன்ன செட்டி தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட பழுதை நீக்க சென்றபோது, மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்து, ராஜிவ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

வீட்டில் ரூ.1.5 லட்சம் மாயம்

திரு.வி.க.நகர்: பெரம்பூர், திரு.வி.க., நகரைச் சேர்ந்தவர் மேனகா, 56; பி.எஸ்.என்.எல்., ஊழியர். இவரது மூத்த மகன் தனியாக வசிக்கிறார். இரண்டாவது மகன் சதீஷ்குமார், மேனகாவுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி, வேலைக்கு சென்றார் மேனகா. இரவு மகன் சதீஷ்குமார், வீட்டு கதவை திறந்த போது, பீரோ திறந்திருந்தது. பீரோவில் இருந்த, 1.56 லட்சம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

செம்பியம்: அகரம், அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரோஜாபாய், 75. வீடுகளுக்கு பால் போடும் வேலை செய்து வந்தார். இவருக்கும், இவரது மகன் சுந்தர் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரவு பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த சரோஜாபாய், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். பலத்த தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சரோஜாபாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சூதாடிய 8 பேர் கைது

பெரம்பூர்: செம்பியம் மார்க்கெட் பகுதியில், பணம் வைத்து சூதாடுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற செம்பியம் போலீசார், காலி மைதானத்தில் சூதாடிய, பட்டாளத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், ௩௨, பெரம்பூரைச் சேர்ந்த முகமது ஆரிப், 30, உட்பட எட்டு பேரை சுற்றிவளைத்தனர். அவர்களிடமிருந்து, 71 ஆயிரத்து, 900 ரூபாய் மற்றும் மூன்று சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தவறி விழுந்த தொழிலாளி பலி

திருமுல்லைவாயில்: அசாம் மாநிலம், நகான் மாவட்டம், லஹார்கட் பகுதியைச் சேர்ந்தவர் இனாமுல், 31. இவர், பாடி, ஜெகதாம்பிகை நகர், வள்ளலார் தெருவில் உள்ள, தனியார் நிறுவனத்தில் ஆறு மாதமாக வேலை செய்து வந்தார். திருமுல்லைவாயில், திருமலைவாசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வரும், 'ஆரா' என்ற நிறுவனத்தில், கட்டடத்தில் துளை போடும் பணியில் இனாமுல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். நேற்று முன்தினம், அந்த கட்டடத்தில் இரண்டாவது மாடியில், ௨௦ அடி உயரத்தில் வேலை செய்து கொண்டிருந்த இனாமுல், தவறி கீழே விழுந்து இறந்தார்.திருமுல்லைவாயில் போலீசார், போதிய பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் செயல்பட்ட ஆரா கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர் உதயகுமார், பெஸ்ட் டூல்ஸ் ஹிரர்ஸ் கம்பெனியின் உரிமையாளர் காஜா முகைதீன் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

மொபைல் போன் பறிப்பு

கோயம்பேடு: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் தாமோஸ், 49; அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர், நேற்று அதிகாலை, இருசக்கர வாகனத்தில் கோயம்பேடில் காய்கறி வாங்கிக் கொண்டு, 100 அடி சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாமோசை வழிமறித்து தாக்கி, அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X