பொது செய்தி

தமிழ்நாடு

பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையத்தில் நவராத்திரி விழா

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஊரப்பாக்கம் : ஊரப்பாக்கம், பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையத்தில், வரும் 6ம் தேதி முதல், நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், ஆதனுார் பிரதான சாலை அருகே, பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையம் உள்ளது. இங்கு, வரும் 6ம் தேதி முதல், நவராத்திரி விழா துவங்க உள்ளது. அன்றைய தினம் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த நாள் முதல்,

ஊரப்பாக்கம் : ஊரப்பாக்கம், பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையத்தில், வரும் 6ம் தேதி முதல், நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம், ஆதனுார் பிரதான சாலை அருகே, பச்சை நிற ஷீரடி சாய்பாபா தியான மையம் உள்ளது. இங்கு, வரும் 6ம் தேதி முதல், நவராத்திரி விழா துவங்க உள்ளது. அன்றைய தினம் கொலு வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அடுத்த நாள் முதல், தினமும், சாய்பாபா பிரார்த்தனையுடன், ஆரத்தி பாடல் பாடப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். தொடர்ந்து, அடுத்த ஏழு நாட்களுக்கு மாலை வேளைகளில், தமிழில் தேவி மஹாத்மிய பாராயணமும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்துடன் கூடிய, விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளன.

எட்டாம் நாளான, சரஸ்வதி பூஜையன்று, காலை 11:00 மணிக்கு, சரஸ்வதி பூஜையும், மாலை, 6:15 மணிக்கு சாயிநாத ஸ்தவன மஞ்சரி பாராயணத்துடன் கூடிய பூஜைகளும், பிரசாதமும் வழங்கப்படும்.ஒன்பதாம் நாளான அக்.,15 விஜயதசமியன்று, காலை 9:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் பஜனையுடன், சாய்பாபா மஹா சமாதி ஆராதனையுடன் கூடிய, அபிஷேக பூஜையும், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.மேலும் விபரங்களுக்கு, 98403 -25245 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X