பொது செய்தி

தமிழ்நாடு

விமான பயணியருக்கு இதய பரிசோதனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணியருக்காக, இலவச இதய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டு தோறும், செப்டம்பர் 29ம் தேதி, உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து, இலவச இதய பரிசோதனை முகாமை நடத்தியது.செப்., 29ம் தேதி,

சென்னை : சென்னை விமான நிலையத்தில், உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணியருக்காக, இலவச இதய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:ஆண்டு தோறும், செப்டம்பர் 29ம் தேதி, உலக இதய தினம் அனுசரிக்கப்படுகிறது. அந்த தினத்தை முன்னிட்டு, சென்னை விமான நிலையம், அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து, இலவச இதய பரிசோதனை முகாமை நடத்தியது.செப்., 29ம் தேதி, சென்னை விமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான இதய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் முதல், உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான பயணியருக்காக, விமான நிலையத்தில் இலவச இதய பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.இதில், ஏராளமான பயணியர் பரிசோதனை செய்து கொண்டனர். இதே போல், மார்பக புற்றுநோய் குறித்தும், விமான நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X