பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரிக்கு இடம் தேடல்; அதிகாரிகள், எம்.எல்.ஏ., ஆய்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருவொற்றியூர் : திருவொற்றியூர் அரசு கல்லுாரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. எம்.எல்.ஏ., மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகள், இதுதொடர்பாக, நேரில் ஆய்வு செய்தனர்.சென்னை, திருவொற்றியூரில், 2012 ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரி துவங்கப்பட்டது. கட்டட வசதி இல்லாததால், தற்காலிகமாக தேரடி பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளி

திருவொற்றியூர் : திருவொற்றியூர் அரசு கல்லுாரிக்கு இடம் தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது. எம்.எல்.ஏ., மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகள், இதுதொடர்பாக, நேரில் ஆய்வு செய்தனர்.

சென்னை, திருவொற்றியூரில், 2012 ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக உறுப்புக் கல்லுாரி துவங்கப்பட்டது. கட்டட வசதி இல்லாததால், தற்காலிகமாக தேரடி பூந்தோட்ட பள்ளி வளாகத்தில் உள்ள மாநகராட்சி துவக்கப் பள்ளி கட்டடத்தில் வகுப்புகள் நடந்து வந்தன.இக்கல்லுாரியில், பல்வேறு பாடப்பிரிவுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கல்லுாரிக்கு நிரந்தர கட்டடம் கட்ட, 7.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில இடங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டு, பின், பல காரணங்களால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. அரசு கல்லுாரியாக தரம் உயர்ந்த பின்பும், நிரந்தர கட்டட பிரச்னை தொடர்ந்தது.

இந்நிலையில், புதிய இடம் தேர்வு செய்யும் பணி, தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.அதன்படி, நேற்று உயர்கல்வித் துறை இணை இயக்குனர் ராவணன், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., சங்கர், கல்லுாரி முதல்வர் அரசு ஆகியோர், திருவொற்றியூர் புதிய பேருந்து நிலையம் அருகே, கூட்டுறவு துறைக்கு சொந்தமான, 5 ஏக்கர் காலி நிலத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X