சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிற்கு, 13ம் தேதி வரை, காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி உள்ளது.இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, மூன்று மாணவியர் புகார்
 சிவசங்கர் பாபா காவல் நீட்டிப்பு

செங்கல்பட்டு : பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிற்கு, 13ம் தேதி வரை, காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில், 'சுஷில் ஹரி இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளி உள்ளது.இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, 73, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக, மூன்று மாணவியர் புகார் அளித்தனர்.காஞ்சிபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார், சிவசங்கர் பாபா மீது, 'போக்சோ' உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், மூன்று வழக்குகள் பதிவுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.

சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவை, காவல் நீட்டிப்புக்காக, புழல் சிறையில் இருந்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன், செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். நீதிபதி தமிழரசி முன், போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை, 13ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X