பொது செய்தி

தமிழ்நாடு

குப்பையில் உருவான கலை பொருள்; தாம்பரம், செம்பாக்கத்தில் கண்காட்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
தாம்பரம் : குப்பை கழிவுகளில் இருந்து, கலை பொருட்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த கண்காட்சியில், சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நாட்டின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இதன்படி,

தாம்பரம் : குப்பை கழிவுகளில் இருந்து, கலை பொருட்கள் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த கண்காட்சியில், சிறப்பாக பணிபுரிந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நாட்டின், 75வது சுதந்திர தின விழாவையொட்டி, 'ஆசாதி கா அம்ருத் மஹோத்சவ்' திட்டத்தின் கீழ், பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.இதன்படி, செம்பாக்கம் நகராட்சியில், குப்பை கழிவுகளில் இருந்து கலை பொருட்கள் தயாரிக்கும் கண்காட்சி நடந்தது. இதில், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள் துவங்கி, பழைய துணிகளை கொண்டு, கலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

எந்தவொரு பொருளையும், குப்பை என நினைத்து துாக்கி எறியாமல், அவற்றை மாற்று முறையில் பயன்படுத்தலாம் என, கண்காட்சியை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு, மகளிர் சுய உதவிக்குழுவினர் எடுத்துரைத்தனர்.கண்காட்சியில், சிறப்பாக பொருட்கள் வடிவமைத்திருந்த கைவினை கலைஞர்கள், மகளிர் சுய உதவி குழுவினருக்கு, நேற்று பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணிபுரிந்த நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.தாம்பரம் நகராட்சியிலும், நேற்று கண்காட்சி நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X