பொது செய்தி

தமிழ்நாடு

71.62 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில், நான்கு மாதங்களில் 71.62 லட்சம் பயணியர் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 26.86 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.சென்னை விமான நிலையம் - விம்கோநகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையங்கள் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுக்கு பின், ஜூ, 21ம் தேதியில் இருந்து 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மெட்ரோ ரயில்கள்

சென்னை : சென்னை மெட்ரோ ரயிலில், நான்கு மாதங்களில் 71.62 லட்சம் பயணியர் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் மட்டும் 26.86 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

சென்னை விமான நிலையம் - விம்கோநகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர். சென்ட்ரல் நிலையங்கள் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கு தளர்வுக்கு பின், ஜூ, 21ம் தேதியில் இருந்து 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரயிலில், ஜூன் 21 முதல், செப்., 30 வரை 71 லட்சத்து 62 ஆயிரத்து 297 பயணியர் பயணம் செய்துஉள்ளனர்.இதில், செப்., 1ம் தேதியில் இருந்து 30ம் தேதி வரை, 26.86 லட்சம் பேர் பயணம் செய்துஉள்ளனர்.

அதிகபட்சமாக, செப்., 9ம் தேதி 1 லட்சத்து 9 ஆயிரத்து 381 பேர் பயணித்துள்ளனர். ரயிலில், 'கியூ ஆர்' கோடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி, 40 ஆயிரத்து 322 பேரும், 'டிராவல் கார்டு' பயன்படுத்தி, 14 லட்சத்து 59 ஆயிரத்து 693 பேரும் பயணம் செய்துஉள்ளனர். மெட்ரோ ரயிலில் முக கவசம் அணியாத பயணியரிடம் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாத, 388 பயணியர் பிடிக்கப்பட்டு, 77 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X