கால்வாய் ஆக்கிரமிப்பு; வருவாய் துறை ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் ஆக்கிரமிப்பு; வருவாய் துறை ஆய்வு

Added : அக் 02, 2021
Share
அம்பத்துார் : அம்பத்துார் மண்டலம், 85வது வார்டு, சாம்தாரியா நகரில், போக்கு கால்வாய், இடுகாடு ஆகியவற்றுக்கான இடம் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் உள்ளது.அதனால், ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது, சாம்தாரியா நகர் வாசிகள், வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கிறது. இது குறித்து, அம்பத்துார் வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சியினரால் நடத்தப்பட்ட விசாரணையில், ஆக்கிரமிப்பு

அம்பத்துார் : அம்பத்துார் மண்டலம், 85வது வார்டு, சாம்தாரியா நகரில், போக்கு கால்வாய், இடுகாடு ஆகியவற்றுக்கான இடம் தனியார் நிறுவன ஆக்கிரமிப்பில் உள்ளது.அதனால், ஒவ்வொரு ஆண்டு பருவ மழையின் போது, சாம்தாரியா நகர் வாசிகள், வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கிறது.

இது குறித்து, அம்பத்துார் வருவாய் துறையினர் மற்றும் மாநகராட்சியினரால் நடத்தப்பட்ட விசாரணையில், ஆக்கிரமிப்பு உறுதியானது.ஆனால், ஆக்கிரமிப்பு செய்த தனியார், அந்த இடத்திற்கு மாற்றாக, வேறு இடம் கொடுக்க ஏற்பாடு செய்வதாக, வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் அங்குள்ளவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.'போக்கு கால்வாய்க்கு மாற்று இடம் தந்தால், அவ்வழியாக நீர் செல்லுமா?' என கேட்டு, மக்கள் அதை ஏற்கவில்லை.

இது குறித்து, சென்னை கலெக்டரிடம் புகார் செய்தனர். இந்நிலையில் நேற்று காலை, கோட்டாட்சியர் இளங்கோவன் தலைமையில், அம்பத்துார் வட்டாட்சியர் தாமோதரன் மற்றும் வருவாய்த் துறையினர், மேற்கண்ட இடத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, ஆய்வு குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X