பொது செய்தி

இந்தியா

மந்த கதியில் நடக்கிறது; பள்ளி செல்லா சிறார் ஆய்வு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரில் பள்ளியிலிருந்து விலகிய சிறுவர் - சிறுமியர் குறித்த ஆய்வு பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. ஒன்றரை மாதங்களில், 25 சதவீத ஆய்வு மட்டுமே முடிந்துள்ளது. 388 பேர் பள்ளியிலிருந்து விலகியது தெரிந்தது.கர்நாடகாவில் பள்ளியிலிருந்து விலகிய 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை அடையாளம் கண்டு, கல்வியளிக்கும்படி மாநில அரசுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம்

பெங்களூரு : பெங்களூரில் பள்ளியிலிருந்து விலகிய சிறுவர் - சிறுமியர் குறித்த ஆய்வு பணி மிகவும் மந்தமாக நடக்கிறது. ஒன்றரை மாதங்களில், 25 சதவீத ஆய்வு மட்டுமே முடிந்துள்ளது. 388 பேர் பள்ளியிலிருந்து விலகியது தெரிந்தது.

கர்நாடகாவில் பள்ளியிலிருந்து விலகிய 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியரை அடையாளம் கண்டு, கல்வியளிக்கும்படி மாநில அரசுக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி அரசு ஆய்வு நடத்தப்படுகிறது.மாநிலத்தின் 29 மாவட்டங்களில் ஆய்வுப்பணி 90 சதவீதம் முடிந்து அறிக்கை தயாராகி வருகிறது. ஆனால் பெங்களூரில் மட்டும், ஆய்வு நடத்துவதில் அசட்டையாக இருக்கிறது.

ஆகஸ்ட் 1ல், ஆய்வு பணியை துவக்கியது. நகரின் 24.25 லட்சம் வீடுகளில் 30 நாட்களுக்குள் ஆய்வை முடிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்திருந்தது. இரண்டு மாதங்கள் கடந்தும் ஆய்வு முடியவில்லை. இதுவரை 2.94 லட்சம் வீடுகளில் ஆய்வு நடத்தியதில், 18 வயதுக்கு உட்பட்ட 1.09 லட்சம் பேர் பள்ளியிலிருந்து விலகியது தெரிந்தது.

பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ரெட்டி சங்கர் கூறியதாவது:அரசின் உத்தரவுபடி அந்தந்த வீடுகளில் சிறுவர், சிறுமியரின் கல்வி நிலை குறித்து தகவல் கேட்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஒரு வீட்டில் ஆய்வு செய்ய குறைந்தபட்சம் 45 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் தேவைப்படுவதால் ஆய்வு தாமதமாகிறது.ஆய்வு நிதானமாக நடப்பதால் இது முடிவடைய மேலும் சில மாதம் ஆகலாம். கூடுதல் ஊழியர்களை நியமித்து, விரைவில் ஆய்வை முடிக்கும்படி ஒப்பந்த நிறுவனத்துக்கு உத்தரவிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X