கே.ஜே.பி., மீண்டும் உதயமாகும்; ம.ஜ.த.,வுடன் கைகோர்க்கும்!| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'கே.ஜே.பி., மீண்டும் உதயமாகும்; ம.ஜ.த.,வுடன் கைகோர்க்கும்!

Added : அக் 02, 2021
Share
'ஷிவமொகா : ''கர்நாடகாவில், கே.ஜே.பி., மீண்டும் உதயமாகும். இக்கட்சியுடன் ம.ஜ.த., கை கோர்க்கும்,'' என காங்., செய்தி தொடர்பாளர் கிம்மனே ரத்னாகர் ஆருடம் கூறினார்.பா.ஜ.,வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கட்சியிலிருந்து விலகி, கர்நாடகா ஜனதா கட்சி எனப்படும் கே.ஜே.பி.,யை எடியூரப்பா ஆரம்பித்தார்; தேர்தலில் தோல்வியை தழுவினார். பின் அக்கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் பா.ஜ.,வில்

'ஷிவமொகா : ''கர்நாடகாவில், கே.ஜே.பி., மீண்டும் உதயமாகும். இக்கட்சியுடன் ம.ஜ.த., கை கோர்க்கும்,'' என காங்., செய்தி தொடர்பாளர் கிம்மனே ரத்னாகர் ஆருடம் கூறினார்.

பா.ஜ.,வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், அக்கட்சியிலிருந்து விலகி, கர்நாடகா ஜனதா கட்சி எனப்படும் கே.ஜே.பி.,யை எடியூரப்பா ஆரம்பித்தார்; தேர்தலில் தோல்வியை தழுவினார். பின் அக்கட்சியை கலைத்து விட்டு, மீண்டும் பா.ஜ.,வில் இணைந்தார்.ஷிவமொகாவில், கிம்மனே ரத்னாகர் நேற்று கூறியதாவது:மாநிலத்தில் கே.ஜே.பி., மீண்டும் உருவாகும். இது, ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைத்து, ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கும். தீர்த்தஹள்ளி தொகுதியில், சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்த அரசியல் நாடோடிகள் கே.ஜே.பி.,யில் சேர்வர்.

தீர்த்தஹள்ளியில், காங்., ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில், ம.ஜ.த., தலைவர்கள் காணப்படுகின்றனர். பிதரகோடியில் நடந்த நிகழ்ச்சியில் தேவகவுடா, குமாரசாமி போட்டோ பயன்படுத்தினர்.காங்., வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட்ட வேறு கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மர்மம் என்ன?நான் கூட்டத்தை ஏற்பாடு செய்து, வேறு கட்சியினரை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தால், மவுனமாக இருப்பரா... யாரையோ அரசியலுக்கு அழைத்து வந்து என்னை ஒழிக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X