பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தான், ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தடை; பட்டாசு ஆலை அதிபர்கள் கவலை

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சிவகாசி : டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலை அதிபர்கள் கவலையில் உள்ளனர். சிவகாசி பகுதியில் 1070 க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொரேனா தொற்றினால் 2020 ல் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டில்லி உட்பட 7 மாநிலங்களில்

சிவகாசி : டெல்லியை தொடர்ந்து ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிவகாசி பகுதி பட்டாசு ஆலை அதிபர்கள் கவலையில் உள்ளனர்.



latest tamil news


சிவகாசி பகுதியில் 1070 க்கு மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இதன் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். கொரேனா தொற்றினால் 2020 ல் கர்நாடகா, ராஜஸ்தான், ஒடிசா, டில்லி உட்பட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் பட்டாசுகள் தேக்கமடைந்த நிலையில் 2021 ல் பட்டாசு உற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை.


அதிகபட்சமாக 60 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது. தொழிலாளர்களுக்கும் முழுமையான வேலைவாய்ப்பு வழங்க முடியவில்லை. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு டெல்லி அரசு பட்டாசு வெடிக்க தடை விதித்தது. இதுபோல் தற்போது ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.


latest tamil news


தமிழ்நாடு பட்டாசு கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான் பாமா)தலைவர் கணேசன்: 2020 ல் பட்டாசு வெடிக்க தடை செய்யப்பட்ட 7 மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட பட்டாசுகளே விற்பனை ஆகாததால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். பட்டாசுகள் இருப்பு அப்படியே உள்ளதால் எந்த ஆர்டரும் வரவில்லை. அதிக மாசு எங்கு உள்ளதோ அப்பகுதிகளில் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் சில மாநிலங்களில் ஒட்டு மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் பட்டாசு தொழில் அழிந்து விடும் அபாயம் உள்ளது,என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202121:59:11 IST Report Abuse
kulandai kannan கடைந்தெடுத்த பித்தலாட்டம். விக்கிரம ராஜா என்ன செய்கிறார்?
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
02-அக்-202120:37:52 IST Report Abuse
Sivagiri முழுக்க முழுக்க - மத துவேஷம்தான் - ஆர்வலர்கள் வேஷத்தில் - புது புது காரண கதைகளில் வழக்கு தொடுக்கப் படுகிறது - அரசியல் கட்சிகளை ப்ளாக்-மெயில் செய்து தடை வாங்கப் படுகிறது கம்யூனிஸ்ட் போர்வையில் உள்ள கன்வெர்ட்டிங் க்ரூப்கள் - மற்றும் வெளிநாட்டு பழமைவாதிகளால் மூளை சலவை செய்யப் பட்ட மதவாத க்ரூப்கள் . . .
Rate this:
Cancel
SIVA - chennai,இந்தியா
02-அக்-202120:29:04 IST Report Abuse
SIVA ஒரு கார் செய்வதற்கு ஒரு லட்சத்து ஐந்பது ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை ஒரு டி ஷர்ட் செய்வதறகு இருபதுமூன்று ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவை அப்ப இதையும் சேர்த்து தடை செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X