ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலி; குடும்ப தலைவர், மருமகன்கள் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : ஒரே குடும்பத்தில் ஐவர் பலியான வழக்கு தொடர்பாக, குடும்பத் தலைவர் சங்கர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.பெங்களூரு பேட்ரஹள்ளியின், திகளரபாளையாவில் வசிக்கும் பத்திரிக்கையாளர் ஹல்லகரே சங்கரின் மனைவி பாரதி, 51, மகள்கள் சிஞ்சனா, 34, சிந்துராணி, 33, மகன் மதுசாகர், 25, சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்து கொண்டனர்.சிந்துராணியின் ஒன்பது மாத குழந்தையும், இறந்து
ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் பலி; குடும்ப தலைவர், மருமகன்கள் கைது

பெங்களூரு : ஒரே குடும்பத்தில் ஐவர் பலியான வழக்கு தொடர்பாக, குடும்பத் தலைவர் சங்கர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு பேட்ரஹள்ளியின், திகளரபாளையாவில் வசிக்கும் பத்திரிக்கையாளர் ஹல்லகரே சங்கரின் மனைவி பாரதி, 51, மகள்கள் சிஞ்சனா, 34, சிந்துராணி, 33, மகன் மதுசாகர், 25, சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்து கொண்டனர்.சிந்துராணியின் ஒன்பது மாத குழந்தையும், இறந்து கிடந்தது. முதலில் பால் இல்லாமல் குழந்தை இறந்திருக்கலாம் என, கருதப்பட்டது. பிரேத பரிசோதனையில், தாயே குழந்தையை கழுத்தை நெரித்து, கொலை செய்திருப்பது தெரிந்தது.

தற்கொலைக்கு முன், மகள்களும், மகனும் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்திருந்தனர். மகன் எழுதிய கடிதத்தில், தந்தை வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவர் தொடர்பு வைத்திருந்தவரின் மகளையே திருமணம் செய்ய வற்புறுத்தினார் என எழுதி இருந்தார்.மகள்கள் எழுதிய கடிதத்தில், 'கணவன் வீட்டிலும் சந்தோஷம் இல்லை; தந்தை வீட்டிலும் நிம்மதி இல்லை' என எழுதி இருந்தனர்.

மேலும் மதுசாகர் தந்தைக்கு எதிரான 15 ஆதாரங்களை லேப்டாப்பில் சேமித்து வைத்திருந்தார்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நான்கு பேர் தற்கொலைக்கு துாண்டியதாக, பத்திரிகையாளர் சங்கர், மருமகன்கள் பிரதீப், ஸ்ரீகாந்த் ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X